லோகி அண்ணா மேல ஏன்டா இவ்ளோ வன்மம்? பிரபலம் கொடுத்த விளக்கம்!
சென்னை: கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆல்பம் பாடல் இனிமேல். இந்தப்பாடல் தொடர்பான புரமோ அண்மையில் வெளியானது. இதில், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். இது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, இவரும் ஸ்ருதிஹாசனும் இணைந்து, இனிமேல் என்ற ஆல்பம் ஒன்றை இயக்கவுள்ளார். அந்த பாடலுக்கான வரிகளை கமல் ஹாசன் எழுதியுள்ளார். டீசரில் இருவரும் பயங்கர நெருக்கமாக இருக்கும் காட்சியை பார்த்துவிட்டு, லோகி படத்தில், இப்படியெல்லாம் சீன் வச்சது இல்லையே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லோகி அண்ணா: இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், அனைவரும் லோகி அண்ணா, லோகி அண்ணா என்று தான் அவரை அழைத்து வருகிறார்கள். இன்றைய 2கே கிட்ஸ்கள் கொண்டாடும் வரிசையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஒரு இளைஞர் தனது உழைப்பால் உயர்ந்து மேல வந்து இருக்கிறார் என்பதால், அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை, இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
லோகி அண்ணா: இவர் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசர் வந்தாலும் வந்துச்சு, இணையமே பத்திக்கிட்டு எரியுது. திரும்பும் இடம் எல்லாம், லோகி அண்ணா, லோகி அண்ணா என்று கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
பலர் கொண்டாடி வரும் நிலையில், ஒரு சிலர் அவரை வன்மத்தோடு பேசி வருகின்றனர். எனக்கு அதுதான் மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த வீடியோவை பதிவு செய்வதற்கும் அதுதான் காரணம், அந்த இனிமேல் ஆல்பம் டீசரில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகி இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். இந்த நெருக்கம் பலரை எரிச்சல் அடையச் செய்துள்ளது.
அசிங்கமான கருத்துக்கள்: இந்த ஆல்பம் பாடலில் முதலில் அவரை நடிக்க அழைத்த போது, அதெல்லாம் செட் ஆகாது என்று தான் மறுத்து இருக்கிறார். இந்த பாடலை கமல் எழுதுவதாலும், நான்கு நிமிடத்தில் வரும் அந்த பாடல் ஒரு கதையை சொல்லுவதால் இதில் லோகேஷ் கனகராஜ் நடிக்க சம்மதித்தேன் என்று சொன்னதாக பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஆனால், பாடல் வெளியாவதற்கு முன்பே டீசரை பார்த்த பலர் அவரை திட்டி வருகிறார்கள்.
இது போல பல விமர்சனத்தை ஸ்ருதி ஹாசன் பார்த்து இருப்பார். அவர் நிஜ வாழ்க்கையில் இருக்கும் காதலை இயல்பாக கடந்து வருகிறார். ஆனால், சினிமாவில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு என்ன மோசமான விமர்சனங்கள், கற்பனைகள், எதற்கு இதெல்லாம் என்று எனக்கு தெரியவே இல்லை. அவ்வளவு அசிங்கமான கருத்துக்களை பகிர்வதும், அவர் மீது வன்மத்தை கக்குவதும் தேவையில்லாத ஒன்று என வலைப்பேச்சு அந்தணன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











