பலரின் வயிற்றெரிச்சல்.. வடிவேலு இன்னும் திருந்தல.. அந்தணன் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். ஆனால், தற்போது அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இதையடுத்து, நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டி ஒன்றில், வடிவேலு பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வடிவேலு, சிங்கமுத்து மானநஷ்டமாக ரூ. 5 கோடி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.
இதற்கு நீதிமன்றத்தில் பதில் அளித்த சிங்கமுத்து, நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின் நான் தான் காரணமாக இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரை பற்றி பேட்டிகளில் பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

வலைப்பேச்சு அந்தணன்: இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், வடிவேலுவின் ஆரம்பகாலத்தில் சிங்கமுத்து இல்லை. இடைப்பட்ட காலத்தில் தான் வந்தார்.அதன் பிறகு நகைச்சுவை என்பது இன்னும் மெருகு ஏறியது. ஆனால், வடிவேலுவின் குழு தனித்தனியாக பிரிந்து போன பிறகு, தனித்துவிடப்பட்ட வடிவேலு, நம்மை சிரிக்கவைக்கவில்லை இதுதான் உண்மை.
வடிவேலுவின் அந்த கூட்டம் இருந்த போது, அவரின் நகைச்சுவை காலத்திற்கும் அழியாத நகைச்சுவையாக இருந்தது. அப்போது வடிவேலுவிடம் இருந்த அந்த திறமைகள் அனைத்தும் கூட்டத்தோடு போய்விட்டது. இதனால் சிங்கமுத்து, நகைச்சுவையில் என் பங்களிப்பு இருக்கு என்று சொல்லியதில் தவறே இல்லை மிகவும் சரியானது தான்.
ஒரே அடாவடி: வடிவேலு பத்து வருடத்திற்கு முன்னே பத்து லட்சம் சம்பளம் வாங்குவார், 11 மணிக்கு வந்துவிட்டு, அறையில் அமர்ந்து கொண்டு காமெடி குறித்து அனைவரிடமும் கலந்து பேசுவார் இதையடுத்து 12 மணிக்கு வந்துவிட்டு ஒரே காட்சியில் நடித்துவிட்டு ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு, கொஞ்சநேரம் தூங்கிவிட்டு மீண்டும் ஒரு காட்சியில் நடித்துவிட்டு 5 மணிக்கு சென்றுவிடுவார். அவர் அதிகபட்சம் 3 மணிநேரம் தான் கேமரா முன்னாடி நிற்பார். இதனால் பல தயாரிப்பாளர்கள் வயிறு எரிந்து அவருக்கு சம்பளத்தை கொடுத்தனர்.
இன்னும் திருந்தல: வடிவேலு இப்படி எல்லாம் செய்யாமல் இருந்து இருந்தால், நிச்சயம் அவருக்கு மார்க்கெட் போய் இருக்காது. ஐந்து வருடம் வீட்டில் சும்மா இருந்த போதும், இன்னும் வடிவேலு திருந்தவில்லை. படப்பிடிப்பில் அதே வேலையைத் தான் செய்து கொண்டு இருக்கிறார். ஐந்து வருடத்திற்கும் மேலாக மக்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள், மக்கள் நம் நகைச்சுவையை ரசிக்கவில்லை என்று கொஞ்சமாவது நினைத்து, மக்களை மனதில் வைத்துக்கொண்டு நடிக்க வேண்டும்.
சுந்தர் சியுடன் வடிவேலு: வடிவேலு தற்போது ஒரு நல்ல படத்தில் நடித்து விட்டார். இருப்பினும் காமெடியில் கம்பேக் கொடுப்பார் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. தற்போது, வடிவேலு சுந்தர் சியுடன் இணைந்து இருக்கிறார், இதனால் நிச்சயம் இந்த படம் வடிவேலுவிற்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் இதற்காக வடிவேலு தன்னை மாற்றிக்கொண்டு, சில சமரசங்களை செய்ய வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











