விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
சென்னை: நடிகை விசித்ரா கவுண்டமணிக்கு வணக்கம் வைக்காததால், வந்த பிரச்சனை குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் இருந்தார். இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், கவுண்டமணி அப்படி செய்யக்கூடிய ஆள் தான், பெரிய நடிகர் மரியாதை தரவில்லை என்றால், இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்றார்.
போர்க்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை விசித்ரா, செந்தில், கவுண்டமணி பிரபலமாக இருந்த காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

கசப்பான அனுபவம்: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விசித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், பெரிய குடும்பம் என்ற படத்தில் நடிக்க இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் கலந்து கொண்டேன். அப்போது கே எஸ் ரவிக்குமார் சார், என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என்று சொன்னார். உடனே நான், எதற்காக என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை நீ வணக்கம் மட்டும் சொல்லு போதும் என்றார்.
வணக்கம் சொல்லுவீங்களா: அப்போது எதற்கு இவர் இப்படி சொல்கிறார் என்று தோன்றியது. இருந்தாலும், கே எஸ் ரவிக்குமார் சார் சொன்னதற்காக கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொன்னேன். அதைக் கேட்டவர், இப்போதான் வணக்கம் சொல்லுவீங்களா? என்று கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார்? என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. பொதுவாகவே அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று விட்டு விட்டேன் என்று பேசி இருந்தார்.
வலைப்பேச்சு அந்தணன்: இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், விசித்ரா சொன்னது போல, கவுண்டமணி வணக்கம் வைக்காததற்கு மட்டுமே தொல்லை கொடுத்து இருந்தார் என்றால், அது பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஏன் இதை சொல்கிறேன் என்றால், கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளு தான். அவர் சினிமாவில் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. இதனால், வணக்கம் வைக்காததால் ஒரு பிரச்சனை நடந்தது என்று விசித்திரா சொல்வதை நிச்சயமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அநாகரீகமான செயல்: ஏன் என்றால், பெரிய நடிகர்கள் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். மரியாதை தானாக வரவேண்டும் என்று நினைக்காமல் மரியாதை தரவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஒருவேளை மரியாதை வரவில்லை என்றால், வர வைக்கிறார்கள் இது ரொம்ப அநாகரீகமான வேலை. இது சினிமா அரசியல், அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பெண்கள் உண்மையில் பாவம்: சினிமாவில் இதை பெண்கள் எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் வளரும் வரைக்கும் அவர்கள் படும்பாடு இருக்கிறதே அதை சொல்வே முடியாது. நயன்தாரா, திரிஷா சந்திக்காத பிரச்சனையா.. இப்போதுக்கூட திரிஷா என் பொண்டாட்டி என்று ஒருவன் சொல்லிக்கொண்டு இருக்கான் அவன் மேல எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். வளர்ந்த நடிகைகளுக்கே இப்படி பிரச்சனை இருக்கும் போது, வளரும் நடிகைக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கும், இதையே விசித்திரா ஒரு எல்லைக்கு உட்பட்டுத்தான் சொல்லி இருக்கிறார், இதையும் தாண்டி நடந்து இருக்கலாம், உண்மையில் சினிமாவில் இருக்கும் பெண்கள் பாவம் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











