கோட் 3 சிங்கிள் சொதப்பல்.. சொத்துபிரச்சனை.. நெருக்கடியில் யுவன்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். இதில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் முடிந்து படம், செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி டிரெண்டான நிலையில் இப்படத்தில் இருந்து ஸ்பார்க் பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் லுக்கை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதுபோல, யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்து வீடியோவில் பேசிய உள்ள வலை பேச்சு அந்தணன்.

மொக்கை பாடல் இல்லை: அதில், யுவன் கோட் பாடலுக்காக மெனக்கெடவில்லை என்றும், பாடல் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றும் பேசப்பட்டு வருகிறது. இதற்காக பாட்டு மொக்கை என்று சொல்லிவிட முடியாது, இரண்டு முறைக்கு மேல் கேட்டால் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஏஆர் ரஹ்மான் பாடலை முதலில் கேட்கும் போது, என்னடா என்று தான் சொல்ல தோணும் ஆனால் மீண்டும் கேட்டால் அந்த பாடல் பிடிக்கும் அப்படித்தான் இந்த பாடலும் இருக்கிறது.
விஷமத்தனமான கருத்து: இணையத்தில் யுவன் குறித்து ஒருவர் யுவன் இந்துவாக இருக்கும் போட்டோவையும், முஸ்லிமாக மாறிய போட்டோவையும் போட்டு, இந்துவாக இருக்கும் போது மியூசிக் நன்றாக இருந்தது, இஸ்லாமியராக மாறிய பின் மியூசிக் இப்படி இருந்தது என்று சொல்லி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷமத்தனம். மதம் ஒரு மனிதனின் திறமையை எப்படி குறைக்கும். இசையில் எங்கிருந்து மதம் வந்தது. இப்படி படைப்பாளிகள் மீது மதத்தை திணிப்பது எவ்வளவு பெரிய தவறு.

நெருக்கடியில் யுவன்: பவதாரணி இறந்தது, குடும்பத்திற்குள் நடக்கும் சொத்து பிரச்சனை, குடும்ப சூழ்நிலை போன்ற காரணத்தால் தற்போது யுவன் நெருக்கடியில் இருக்கிறார். இது மட்டுமில்லாமல் தற்போது யுவன் துபாயில் குடியேறி உள்ளார். அந்த சூழல் காரணமாக வேண்டுமானால் சின்ன தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











