நயன்தாராவை மிஞ்சிய ஜாக்குலின்.. ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டீஸ்.. பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: விஜய் டிவி புகழ் ஜாக்குலினுக்கு அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் இருந்த போதே ஓரளவுக்கு ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் அவரது ரசிகர்கள் கூட்டம் தாருமாறாக எகிறியது. 17 வாரங்கள் வீட்டில் இருந்த ஜாக்குலின் அனைத்து வாரங்களும் நாமினேட் செய்யப்பட்டார்.
பணப்பெட்டி சுற்றிலில் டாஸ்க்கை முடிக்காத காரணத்தால் ஜாக்குலின் வெளியேறினார். பிக் பாஸ்க்குப் பின்னர் அவர் நடித்து வெளியாகியுள்ள படம் கெவி. இந்த படத்தில் முழுவதும் நடிக்காமல், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கெவி திரைப்படம் மலைவாழ் மக்கள் குறித்தும், அவர்களது வாழ்வியல் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் பேசும் படம். இந்த படத்தை தமிழ் தயாளன் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷீலா, சார்லஸ் வினோத், ஆதவன், ஜாக்குலின் என பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 18ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பிஸ்மி: அதாவது அவர் இது தொடர்பாக பேசுகையில், " நயன்தாரா குறித்து எல்லாம் நாம் பல விஷயங்கள் பேசியுள்ளோம். குறிப்பாக படப்பிடிப்புத் தளத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்று எல்லாம் பேசியுள்ளோம். இப்படி இருக்கும்போது, ஜாக்குலின் குறித்து கேள்விப்பட்ட பின்னர்தான், நயன்தாரா எவ்வளவோ பரவாயில்லை என்கிற எண்ணமே வந்துவிட்டது. நயன்தாராவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்துள்ளார் ஜாக்குலின். கதையைக் கேட்டு விட்டு, நடிக்க ஒத்துக் கொண்டவர், இயக்குநரிடம் தன்னுடைய போர்ஷன் 40 நிமிடங்கள் கட்டாயம் வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
முழு சம்பளம்: அதன் பின்னர் படத்தில் நடித்தவர், ஒரு கட்டத்தில் தனது முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு கூறியதால், இயக்குநரும் தயாரிப்பாளரும் பணத்தைப் புரட்டி கொடுத்துள்ளார்கள். பணத்தை வாங்கிக் கொண்ட ஜாக்குலின், கிளைமாக்ஸில் நடிக்க செல்லவில்லையாம். அதன் பின்னர் இயக்குநர் தனது உதவி இயக்குநருக்கு ஜாக்குலின் போல காஸ்ட்யூம் எல்லாம் போட வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: அதன் பின்னர் படத்தின் புரோமோஷனுக்கு அழைத்துள்ளார்கள். முழு படத்தையும் பார்த்துவிட்டுத்தான் புரோமோஷனில் கலந்து கொள்வது தொடர்பாக முடிவெடுப்பேன் எனக் கூறியுள்ளார். முழு படத்தையும் போட்டுக் காட்டியுள்ளார்கள். படம் பார்த்த பின்னர் ஜாக்குலின் புரோமோஷனுக்கு வரவில்லை. வளர்ந்து வரும் காலத்திலேயே ஜாக்குலின் இவ்வாறு செய்கிறாரே" என பிஸ்மி கூறினார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், ஜாக்குலின் ஏன் முழு படத்தையும் நடித்துக் கொடுக்கவில்லை, அவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் ஏதாவது அசௌகரியங்கள் நடைபெற்றதா? அல்லது வேண்டுமென்றே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாக்குலின் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











