லைகா மீது கோபத்தில் விஜய்.. தளபதிக்கே சவால் விடும் சஞ்சய்.. பிரபலம் சொல்லும் ஷாக் தகவல்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாவதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், லைகா மூலம் மகன் படம் இயக்கப்போவது விஜய்க்கே தெரியாதாம்.

valai pechu Bismi interview about actor Vijays son Jason Sanjay

இதனால், லைகா மீது விஜய் கோபத்தில் இருப்பதாக பீஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்: அதில், விஜய் போல மாஸ் நடிகரின் மகன், அப்பாவைப் போல ஈசியா ஹீரோவாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காமல், ஒரு இயக்குநராக வேண்டும் என்று சஞ்சய் முடிவு செய்திருப்பதை உண்மையில் பாராட்ட வேண்டும். விஜய்யின் மகன் என்பதால் தான் சஞ்சய்க்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு என்று பேச்சு சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

எஸ்.ஏ. சந்திர சேகரின் பேரன்: சஞ்சயை பல இயக்குநர்கள் நடிகராக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்., ஏஆர் முருகதாஸ் போன்ற பல முன்னணி இயக்குநர்கள் கூட சஞ்சயிடம் கதை சொன்னார்கள். ஆனால், எனக்கு நடிகராகும் விருப்பம் இல்லை, இயக்குநராவது தான் தனது விருப்பம் என்று, அந்த இளம் வயதிலும் உறுதியாக இருந்துள்ளார். அது மட்டுமில்லாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ. சந்திர சேகரின் பேரன் என்பதால்,சஞ்சய் நிச்சயமாக தளபதிக்கே சவால் விடும் வகையில் இயக்குநராக வெற்றி பெறுவார்.

இதுதான் காரணம்: லைகா மூலம் மகன் படம் இயக்கப்போவது விஜய்க்கே தெரியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், விஜய் மனைவி சங்கீதாவின் அப்பா ஒரு ஈழத் தமிழர், லைகா சுபாஷ்கரனும் ஈழத் தமிழர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், விஜய் மகன் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பை லைகா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கோபத்தில் விஜய்: கத்தி படத்திற்கு பின் விஜய் லைக்காவிற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. விஜய்யின் கால்ஷீட்டிற்காக பல வருடங்களாக லைகா காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கே தெரியாமல் லைகா இப்படி மகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் விஜய் லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X