Bala 25: சதி நடந்தது.. பாலா 25க்கு விக்ரம் வந்திருக்கனும்.. பிஸ்மி சொன்ன ஷாக்கான வரலாறு!
சென்னை: இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் இயக்குநராக கால் பதித்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான சேது படம் தொடங்கி, அதன் பின்னர் அவர் இயக்கிய, படங்கள் அனைத்துமே, ரசிகர்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய படங்கள். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா 25 ஆகிய இரண்டையும் ஒருநேரத்தில் நிகழ்ச்சியாக நடத்தினார், வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இப்படியான நிலையில் பாலா 25இல் விக்ரம் கலந்து கொள்ளாதது குறித்து, வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திரா பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட வைரங்களில் ஒன்று பாலா. பாலு மகேந்திராவின் சினிமா தாக்கம், பாலா படத்திலும் சில காட்சிகளில் வெளிப்படும். பாலா தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவராக உள்ளார். யாருமே தொட நினைக்கும் கதையை, படமாக்கி அதனை வெற்றி பெறவும், ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் இயக்குநராக உள்ளார்.

இவரது இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் நடிகர் சூர்யாதான். அதன் பின்னர் சில காரணங்களால், சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் இந்தப் படத்தில் அருண் விஜய் கமிட் ஆனார். சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதால்தான், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகினார் என கிசுகிசுக்கப்பட்டது.

சேது: இப்படியான நிலையிலும் சூர்யா, பாலா 25 நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால், விக்ரம் வரவில்லை. இது திரைத்துறையில் பேசுபொருளாக மாறியது. விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் அடையாளம் கொடுத்ததே, சேது படம் தான். அந்தப் படத்தின் இயக்குநர் பாலாவுக்கு நடைபெறும் விழாவில் விக்ரம் கலந்துகொண்டிருக்கவேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக பிஸ்மி, பேட்டி ஒன்றில், " சேது படத்திற்கு முன்னர் விக்ரம் பல உப்புமா படங்களில் நடித்தார். ஆனால் சேது படம்தான் அவருக்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சேது படத்தின் ரிலீஸ்க்கு முன்னர், சுமார் 100 காட்சிகள் ப்ரீவ்யூ காட்சி திரையிடப்பட்டது. ஆனால் யாரும் படத்தை ரிலீஸ் செய்ய முன்வரவில்லை.

சதி: படம் ரிலீஸ் ஆன பின்னர், ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் நன்றாக இல்லை எனக் கூறிக்கொண்டே இருந்தனர். மேலும் படத்தின் போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் அதனைக் கிழித்தார்கள். இப்படியான சதியெல்லாம் சேது படத்திற்கு நடந்தது. அதையும் மீறி படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது.

துருவ் விக்ரம்: பாலா 25 நிகழ்ச்சிக்கு விக்ரம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவர் வரவில்லை. குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறுகின்றார்கள். பாலாவுக்கு இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது தெரிந்து விக்ரம் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்குப் போய்விட்டாரா எனத் தெரியவில்லை" எனக் கூறினார். சிலர் விக்ரமின் மகனின் முதல் படமான வர்மா படத்தின்போது ஏற்பட்ட மனக்கஷ்டத்தினால்தான் விக்ரம் வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











