போஸ்டரில் சொதப்பிய லோகேஷ்.. இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அதிர போகுது.. பிஸ்மி பேட்டி!

சென்னை: இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அதிரடியாக இருக்கும் என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படத்தில் விஜய்,மிஷ்கின், அர்ஜூன்,த்ரிஷா, பிரியா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Valai Pechu Bismi interview on Thalapathy Vijays Leo audio launch

லியோ: லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். அநேகமாக விழா நடந்து முடிந்த பிறகு அங்கு நடந்தது லியோ இசைவெளியீட்டு விழாவே கிடையாதுப்பா, விஜய் மக்கள் இயக்க மாநாடு என்று சொல்லுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கம்: ஏன் என்றால்,லியோ இசைவெளியீட்டு விழாவிற்கு சினிமாவில் உள்ள முக்கியமான நபர்களுக்கே அழைப்பு இல்லை என்றும், முழுக்க ழுழுக்க விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் டிக்கெட்டுகள் விஜய் மக்கள் இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Valai Pechu Bismi interview on Thalapathy Vijays Leo audio launch

விஜய் அதிரடி பேச்சு: இதனால், லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுக, பாஜக என இரண்டு கட்சிகளையும் அவர் விமர்சனம் செய்து பேசினால், லியோ படம் ரிலீஸ் ஆகும் போது அதன் விளைவு தெரியும் என்பதால், இந்த சிக்கலில் எல்லாம் சிக்காமல் வழக்கம் போல நண்பா,நண்பி என குட்டிகதையை சொல்லிவிட்டு செல்லவும் வாய்ப்பு இருக்கு.

சொதப்பிவிட்டார்: லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதால், தினமும் லியோ படம் குறித்த அப்டேட் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த போஸ்டர் விமர்சனம் செய்யும் படிதான் இருக்கு என்றும் லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X