பலர் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்.. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை க்ளோஸ்!

சென்னை: பலரின் வாழ்க்கையில் விளையாடிய சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை க்ளோஸ் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

valai pechu Bismi Interviews About on D Imman and sivakarthikeyan controversy

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியது, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோஷியல் மீடியாவில் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன.

மொத்த கதையும் தெரியும்: இந்நிலையில்,சினிமா மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, சிவகார்த்கேயன் இமான் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சிவகார்த்திகேயன் மற்றும் இமான் விவகாரம் ஆறு மாதத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும். இமானுக்கும் எங்களுக்கு இடையே இருக்கும் நெருங்கிய நண்பர் மூலமாக இந்த மொத்த கதையும் எங்களுக்கு தெரியும்.

கடமை இருக்கு: இந்த விஷயம் குறித்து எல்லாம் தெரிந்து இருந்தும் நாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் இதுவரை சொன்னது இல்லை. ஆனால், டி இமானே, சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று பொது வெளியில் சொன்ன பிறகு அதை மக்களுக்கு சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.

குடும்பத்திற்கு துரோகம்: சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஓர் பேராதரவு இருக்கிறது. இப்படி பெண்கள் கொண்டாடும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயன், ஒரு குடும்பத்தில் ஒரு துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நாம் மக்களிடம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டும் அதைத்தான் வலைப்பேச்சு செய்கிறது.

valai pechu Bismi Interviews About on D Imman and sivakarthikeyan controversy

ஆதாரம் இருக்கு: ஆனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாக சொல்கிறார்கள். இப்படி ஒரு செய்த பரவும் போது சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து டி இமான் சொல்வது எல்லாமே பொய், நான் நேர்மையானவன், உண்மையானவன் என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை சொல்லி இருக்கலாம். ஆனால், சிவகார்த்திகேயன் செய்த அந்த துரோகத்திற்கு ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை பார்த்துவிட்டுத்தான் நான் பேசுகிறேன். அதை வெளியிடும் சூழ்நிலை வந்தால் நிச்சயம் வெளியிடுவேன்.

கெஞ்சிய சிவகார்த்திகேயன்: அதேபோல இமான் பேட்டி வெளியான அன்றே, சிவகார்த்திகேயன் அவரை தொடர்பு கொண்டு, இந்த பேட்டியை இணையத்தில் நீக்க வேண்டும் என்று கெஞ்சி உள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இதை அவர்கள் தரப்பு மறுக்கும் பட்சத்தில் ஆதாரத்தை வெளியிடுவோம் என்றார்.

சினிமா வாழ்க்கை க்ளோஸ்: தொடர்ந்து பேசிய பிஸ்மி நல்லவேளையாக சிவகார்த்திகேயின் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாக வில்லை ஒரு வேளை தீபாவளிக்கு வெளியாகி இருந்தால், மக்கள் படத்தை புறக்கணித்து இருப்பார்கள். சிவகார்த்திகேயனை பிரன்சாக பார்த்த ரசிகர்கள் அவரை இப்போது திட்டிவருவதை பார்க்க முடிகிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X