கோட் வெற்றிப்படம்தான்.. சமூகவலைதளங்களில் கூறுவது போல இல்லை.. வலைப்பேச்சு பிஸ்மி ஓபன்!

சென்னை: நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் கோட். இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களும் இணைந்திருந்த நிலையில் படத்தில் அனைவருக்கும் சமமான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

கோட் படத்தில் அதிகப்படியான நடிகர்களை வைத்து வேலை வாங்கிய வெங்கட் பிரபு, தொழில்நுட்பத்திலும் அதிகமான கவனத்தை செலுத்தி இருந்தார். ஆனால் படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தமிழில் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது.

vijay goat movie valai pechu bismi

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி தொடர்ந்து திரையரங்குகளில் குறிப்பாக தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் பான் இந்தியா படமாக தான் வெளியானது. ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையிலும் இந்த படம் அங்கு ரசிகர்களை கவர தவறியுள்ளது. ஆயினும் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தை திரையரங்குகளில் சென்று என்ஜாய் செய்து வருகின்றனர். வார நாட்களிலும் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

கோட் பட வசூல்: இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் 400 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய்யின் கோட் படம் வெற்றி படம்தான் என்று வலை பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறுவதைப் போல கோட் படம் வசூலில் சொதப்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்துடன் கம்பேர் செய்யும் போது கோட் படம் வசூலில் குறைந்துள்ளதாகவும் ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த படம் வெற்றி படம் தான் என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம்: விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள கோட் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்தது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளது. படத்தில் அதிகப்படியான நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்கியுள்ள வெங்கட் பிரபு, இந்த படத்தில் அதிகபட்சமான தொழிலுட்பத்தையும் வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பிரயத்தனத்தை அவர் கதைக்களத்தில் செலுத்தியிருந்தால் படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 69 பட அறிவிப்பு: அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ள நிலையில், அவரது அரசியல் பிரவேசம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X