விஜய்யுடன் சேர்த்து வைத்து பேசிய இணையவாசிகள்.. கடுப்பில் பிஸ்மிக்கு போன் போட்ட கீர்த்தி சுரேஷ்?

சென்னை: விஜய்யும் த்ரிஷாவும் தனி விமானத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவாவிற்குச் சென்றதும்தான் சென்றார்கள், இணையத்தில் நுழைந்தாலே அதுதொடர்பான செய்திகள் வந்து குவிந்துகொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு த்ரிஷாவுக்கும் சினிமாவைக் கடந்து ஒரு உறவு இருக்கின்றது எனவும் சிலர் கருத்து தெரிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில், இந்த விவகாரம் குறித்து மிகவும் காட்டமாக, வலைபேச்சு பிஸ்மி பேசியுள்ளது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அதாவது விஜய் த்ரிஷா குறித்த விவகாரம் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா துறையில் அவ்வப்போது புகைச்சலைக் கிளப்பி இருந்தாலும், விஜய்யின் 50வது பிறந்த நாளுக்கு த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து, பதிவிட்டிருந்தது, ஏற்கனவே இருந்த புகைச்சலை மேலும் அதிகரித்தது. இப்படியான நிலையில் நடிகை த்ரிஷாவும், விஜய்யும் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தனி விமானத்தில் கோவா சென்றார்கள். இது தொடர்பான விடியோக்கள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இது தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் கூறி வந்த நிலையில், வலைபேச்சு பிஸ்மியின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

bismi vijay trisha keerthy suresh

பிஸ்மி: அதாவது, இது தொடர்பாக அவர் பேசுகையில், " விஜய்யுடன் த்ரிஷா போனதால்தான் இந்த அளவுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால், இதுவே ஒரு ஆண் நண்பர் சென்றிருந்தால் இப்படி பேசுவார்களா? விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் கில்லி படத்தில் இருந்தே நல்ல நட்பு உள்ளது. அது இப்போதுவரை தொடர்கின்றது. விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பல வதந்திகள் உள்ளது. ஆனால் அவையெல்லாம் உண்மையா எனத் தெரியாமல் பேசுவது தவறு. உண்மை என்ன எனத் தெரியாமல் அது குறித்து பேசவும் முடியாது, கருத்து கூறவும் முடியாது.

கீர்த்தி சுரேஷ்: விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் நல்ல நட்பு உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். முன்பு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து பல்வேறு வதந்திகள் போய்க்கொண்டு இருந்தது. அப்போது, கீர்த்தி சுரேஷே எனக்கு போன் செய்து பேசினார். அப்போது, சார், என்னைப் பற்றியும் விஜய் சார் பற்றியும் தேவையில்லாத பொய்யான தகவல்கள் வந்துகொண்டு உள்ளது. நான் செம அப்செட்ல இருக்கேன். நான் பள்ளிக் காலத்தில் இருந்தே ஒருவரைக் காதலித்து வருகின்றேன். இது தெரியாமல் என்னென்னமோ பேசிக்கொண்டு உள்ளார்கள்.

உண்மை: என்னுடைய காதலரின் பிறந்த நாளுக்கு விஜய் சார் போன் செய்து பேசியுள்ளார். இதை என்னால் வெளிப்படையாக சொல்லமுடியாது சார். என்னுடைய வீட்டில் எனது காதலுக்கு இன்னும் சம்மதம் கிடைக்கவில்லை. நான் போராடிக்கொண்டு இருக்கின்றேன். இது தொடர்பாக நீங்கள் பேசுங்க சார் என என்னிடம் கேட்டுக் கொண்டார். மேலும் புகைப்படமும் எனக்கு அனுப்பினார். இதுதான் உண்மை. ஆனால் வருகின்ற வதந்தியை அனைவரும் மேலும் மேலும் பெரிதாக்கிக்கொண்டே இருக்கின்றார்கள் என பிஸ்மி பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X