டோன்ட் டச்.. யோகி பாபுவிடம் தீண்டாமையை கடைபிடித்தது அஜித் குமாரா?.. பிஸ்மி இப்படி சொல்றாரே!

சென்னை: தமிழ் சினிமா உலகில் நடைபெறும் பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருபவர்களில் மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்கள் அவர்களது வீடியோவில் கூறும் பல செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். பல செய்திகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள வீடியோவில் பல திடுக்கிடும் தகவல்களை இவர்கள் மூவரும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக உலா வந்த வண்ணம் உள்ளது. அதில் யோகி பாபு மறைமுகமாக, வலைபேச்சு அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தியை குறிப்பிடுவதைப் போல் இருந்தது. இதனால் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக, இவர்கள் மூவரும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ajithkumar yogi babu

அந்த வீடியோவில், அந்தணன் பேசுகையில் " யோகி பாபுவிடம் நாங்கள் பணம் கேட்டதாக கூறுகின்றார். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்கவில்லை என யோகி பாபு நம்பக்கூடிய திருத்தனி முருகன் கோவிலுக்கு வந்து சத்தியம் செய்கின்றோம். அவரையும் வரச்சொல்லுங்கள். வரும்போது அவர்து குழந்தையையும் கூட்டி வரச் சொல்லுங்கள். நாங்களும் எங்களது குழந்தைகளைக் கூட்டி வருகின்றோம். இதையெல்லாம் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியலாம். ஆனால் எங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு நாங்கள் கட்டாயம் பதில் கொடுத்தே ஆகவேண்டும். திருத்தனி முருகன் கோவிலுக்கு வந்தாலும் சரி, பழனி முருகன் கோவிலுக்கு வந்தாலும் சரி, சத்தியம் செய்ய நாங்கள் தயார். மேலும் நாங்கள் கையேந்த வேண்டும் என்றால், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோரிடம் கூட கேட்டுக் கொள்வோம், இவரைப் போன்றவரிடமா கேட்போம் எனவும் அந்தணன் குறிப்பிடுகின்றார்.

ajithkumar yogi babu

யோகிபாபு குப்பை: பொய்யை கொஞ்சமும் கூசாமல் உண்மைபோல் பேசும் யோகி பாபு கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசுங்கள். தமிழ் சினிமா பல நேரங்களில் திறமை சாலிகளை கோபுரத்தில் உட்காரவைக்கும், பல நேரங்களில் குப்பைகளை உட்கார வைக்கும். அப்படிப்பட்ட குப்பைதான் யோகிபாபு என பிஸ்மி மிகவும் காட்டமாக விமர்சிக்கின்றார்.

ajithkumar yogi babu

கருப்புப் பணம்: இதுமட்டும் இல்லாமல், யோகி பாபு ஒரு நாளை ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், அதில் 5 லட்ச ரூபாயை மட்டும் வருமானக் கணக்கில் கொண்டு வருவதாகவும், மீதம் உள்ள ரூபாய் 20 லட்சத்தை கருப்புப் பணமாக கேட்பதாகவும் பிஸ்மி குறிப்பிடுகின்றார். தொடர்ந்து பேசும் அவர், இவையெல்லாம் நமக்குத் தெரியும், ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லி அவரது தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என நாம் இருந்தோம் எனக் கூறுகின்றார்.

ajithkumar yogi babu

அஜித்குமார்: மேலும் தொடர்ந்து பேசும் பிஸ்மி, பல வருடங்களுக்கு முன்னர் யோகி பாபு படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஒருவரைத் தொட, அந்த நடிகரோ 'டோன்ட் டச்' எனக் கூறிவிட்டதாகவும், இதனால் யோகி பாபு மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானதாகவும் கூறினர். இந்நிலையில் இன்றைய வீடியோவில், யோகி பாபுவிடம் டோன்ட் டச் எனக் கூறியது நடிகர் அஜித்குமார் என்றும், நடிகர் யோகி பாபு கூறிதான் இந்த விஷயத்தை நாங்கள் கூறினோம் என்றும் கூறியுள்ளனர்.

ajithkumar yogi babu

இவர்களின் இந்த பேச்சு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார், யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தாரா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X