Bismi: சூடுபிடிக்கும் அஜித் தீண்டாமை விவகாரம்? யோகி பாபு 4 முறை போன் செய்தார்.. கோபப்பட்ட பிஸ்மி!
சென்னை: நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் யோகி பாபு அவரை தொட்டபோது டோன்ட் டச் எனக் கூறியதாக வலைபேச்சு பிஸ்மி கூறியிருந்தார். இது திரைத்துறையில் அதிர்ச்சியைக் கிளப்பியது. மேலும் இந்தத் தகவலை தங்களிடம் யோகிபாபுதான் கூறினார் எனவும் பிஸ்மி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் பலருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலை யோகி பாபு தனக்கு நான்கு முறை போன் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடூயூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்து கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டு உள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவேவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி பாபு குறிப்பிட்டார். யோகி பாபு பேட்டியில், வலைப் பேச்சு என்ற வார்த்தையையோ அல்லது அவர்களது பெயர்களையோ குறிப்பிடவில்லை. ஆனால் யோகி பாபுவின் பேச்சு, வலைபேச்சு யூடியூப் தளத்தினைத் தான் குறிக்கின்றது என பலருக்கும் மறைமுகமாக புரியும் வகையில் பேசியிருந்தார்.

யோகி பாபுவின் இந்தப் பேச்சைக் கேட்ட, வலைபேச்சு யூடூயூப் தளத்தினைச் சேர்ந்த அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி மூவரும் யோகி பாபுவுக்கு எதிராக மிகவும் காட்டமான வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் பேசுகையில், யோகி பாபுவிடம் டோன்ட் டச் எனக் கூறியது நடிகர் அஜித்குமார் என்றும், நடிகர் யோகி பாபு கூறிதான் இந்த விஷயத்தை எங்களிடம் கூறினார் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஊடக அறத்தினால்தான், நாங்கள் யோகி பாபுதான் இந்த விஷயத்தை எங்களிடம் கூறியதாக குறிப்பிடவில்லை எனவும் பிஸ்மி குறிப்பிட்டிருந்தார்.
பிஸ்மி: இப்படியான நிலையில், வலைபேச்சு பிஸ்மி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, " நாங்கள் எங்களது வீடிடோவில் நல்லதையும் சொல்கின்றோம், அல்லதையும் சொல்கின்றோம். யோகி பாபு சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அவரை பன்னி மூஞ்சி வாயா என அழைக்கும் விதமாக அமைத்திருந்தனர். இது தவறு மற்றும் மனித உரிமை மீறல் என நாங்கள் வீடியோ வெளியிட்டு இருந்தோம்.
தயாரிப்பாளர்கள்: யோகி பாபு நாளுக்கு நாள் வளர வளர சிம்பு, விஷால் மற்றும் வடிவேலுவைப் போல் தயாரிப்பாளர்களை சாகடிக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக ஒருவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட தேதியில் நடிக்க வருகின்றேன் என்பது. அதற்குள் அதைவிட யாராவது சம்பளம் கொடுத்தால் அவர்களுக்கு போய் நடித்துக் கொடுப்பது என இவ்வாறு பலமுறை செய்துள்ளார். இவையெல்லாம் எங்கள் காதுகளுக்கு வரும்போது இது குறித்து பேசுகின்றோம்.

யோகி பாபு: படப்பிடிப்புத் தளத்தில் அவர் கூறிய வார்த்தையை நாங்கள் அப்படியே ஒரு வீடியோவில் கூறியதால், அவர் செல்லும் ஒவ்வொரு படப்பிடிப்புத் தளத்திலும் வலைபேச்சியில் இருப்பவர்கள் உங்களுக்குத் தெரியுமா என விசாரிக்கத் தொடங்கிவிட்டார். இந்த விவகாரத்தை நாங்கள் வெளியே சொன்ன பின்னர் இந்த விவகாரம் மிகவும் பெரிதானது. இது தொடர்பாக நான் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தேன். அப்போது எனக்கு புதிய எண்ணில் இருந்து நான்கு முறை அழைப்பு வந்தது.
4 முறை: நான் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்ததால் எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் ட்ரூ காலரில் செக் செய்தபோது யோகி பாபு என தெரியவந்தது. நான் அவரிடம் பேச விரும்பாததால் அவருக்கு திரும்பி போன் செய்யவில்லை. நாங்கள் கூறியதைப் போல் அவரும் மக்களிடத்தில் நேரடியாக சொல்லட்டும் என காத்துக்கொண்டு இருக்கின்றேன்" என பேசியுளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











