‘தளபதி 68’ டைம் ட்ராவல் கதையா? அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்த பிஸ்மி!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கதை குறித்து சுவாரசியமானத் தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

Valai Pechu Bismi shared interesting information about Thalapathy 68 story

மேலும், லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தளபதி 68: தளபதி 68 படத்தில் இடம்பெறும் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு பாங்காங் சென்றனர். ஆனால் அங்கு கார் சேஸிங், கார் பிளாஸ்ட் போன்றவற்றுக்கு தாய்லாந்த் அரசு அனுமதி தராததால், பட குழுவினர் அதிரடியாக தாய்லாந்தில் இருந்து சென்னை கிளம்பி வந்துள்ளது. இருப்பினும் போனதற்காக ஒரு சிலர் ரொமான்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.

டைம் டிராவல் கதையா: இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி தளபதி 68 படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், டைம் டிராவல் கதையை மையமாக வைத்து கதை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய், டைம் டிராவல் மூலம் காலம் கடந்து சென்று அப்பாவின் கடந்த காலத்தை தெரிந்து கொள்வது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன மாநாடு இரண்டா என பலரும் கேட்டு வருகின்றனர்.

ஏ.ஐ தொழில்நுட்பம்: விஜய் இதில் 25 வயது மற்றும் 50 வயது என இரு தோற்றங்களிலும் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல்களும் தெரிய வந்துள்ளது. இளமையான விஜய் தோன்றுவதற்காக அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றெல்லாம் தகவல் வந்து இருப்பதாக பிஸ்மி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு பொதுவாகத் தனது கதையைக் காமெடி கலந்து சுவாரசியமாக கொண்டு செல்வார். அந்த வகையில் இந்த படத்தில் ட்விஸ்ட்டுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் பெரிதும் நம்புகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X