காரை ஓட்டி கிழவியை கொன்ன.. பர்ஸ்ட் நைட் வீடியோ தவிர எல்லாத்தையும் போட்ட.. இர்பானை விளாசிய பிஸ்மி!
சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, இர்பானை கடுமையாக விளாசி உள்ளார்.
பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்

அரசியல் சப்போர்ட்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிஸ்மி, இந்த விஷயத்தில் இர்பான் கைது செய்யப்பட வேண்டுமா என்றால் நிச்சயம் அவர் கைது செய்யப்பட வேண்டும் அவருக்கு குறைந்தபட்சம் தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனால், இர்பான் யார் என்று தெரிந்தவர்களுக்கு அவர் மீது எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது தெரியும். அதற்கு காரணம் எம்பி கனிமொழியை ஒருமுறை இர்பான் பேட்டி எடுத்தார். அந்த வகையில் அவரின் குட்லுக்கில் இர்பான் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவியின் நன்மதிப்பையும் அவர் பெற்று இருக்கிறார்.
கார் விபத்து: கடந்த சில மாதங்களுக்கு முன், இர்பானின் கார் மோதி ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த காரை டிரைவர் ஓட்டி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த காரை இர்பான் தான் ஓட்டிவந்தார் என்றும், விபத்து நடந்த பின் தான், அவர் காரை விட்டு ஓடியதாக சொல்லப்பட்டது. அந்த காரை இர்பான் ஓட்டி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால், அது உயர்ரக கார், அந்த காரை டிரைவரை வைத்து ஓட்ட வாய்ப்பு இல்லை. அதுமட்டும் இல்லாமல் விபத்து நடந்த சில நாட்களிலேயே அந்த கார் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதில் இருந்தே அவர் எந்த அளவிற்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பது தெரிகிறது.
பணம் இருந்தால்: தற்போது தனது குழந்தையின் பாலினத்தை துபாய்க்கு சென்று பார்த்துவிட்டு, இங்கு வந்து அறிவித்து இருக்கிறார். பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு தான். இந்த சட்டம் போடப்பட்டது. ஆனால், இர்பானின் இந்த செயலால், பணம் வைத்து இருப்பவர்கள் துபாய்க்கு சென்று என்ன குழந்தை என்று பார்த்துவிட்டு அழிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அவர் வழிவகை செய்து இருக்கிறார்.
வேதனையாக இருக்கு: இர்பான் தற்போது அந்த வீடியோவை டெலிட் செய்து இருக்கிறார். ஆனால், அந்த வீடியோவை இரண்டு மில்லியன் பேர் பார்த்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல விஷயத்தை பார்க்கும் எண்ணம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது, ஒரு பிரபலம் எதை வாந்தி எடுத்தாலும் அதைப் பார்க்கும் மனநிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆரம்பத்தில் புட் ரிவ்வியூவராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை பதிவு செய்ய தொடங்கிவிட்டார். அண்மையில் அவருக்கு நடந்த திருமணத்தில் தனது முதல் இரவு வீடியோவை தவிர அனைத்தையும் பதிவு செய்தார். இதையும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது என்று பிஸ்மி தனது வேதனையை பதிவு செய்தார்.


Click it and Unblock the Notifications











