எல்லாமே பொய்.. சிவகார்த்திகேயன் போட்ட டிராமா.. பிரபலம் சொன்ன அந்த தகவல்!
சென்னை: இமான் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்காகவே, சிவகார்த்திகேயன் குடும்ப போட்டோவை பகிர்ந்தார் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். சிவகார்த்திகேயன் நடிப்பில், வெளியான மனம் கொத்தி பறவை படத்திற்காக இசையமைத்திருந்தார் டி.இமான்.

அந்த படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைப்பாளராக இருந்தார்.
இமான் சிவகார்த்திகேயன்: ஒன்றாக பணிபுரிவதை தாண்டி, இவர்கள் குடும்ப நண்பர்கள் போலவே பழகியதாக வந்த நிலையில், சில ஆண்டுகளாக இருவரும் எதிரும் புதிருமாக மாறினார். இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்த டி இமான், தனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண முடியாது என்றார்.
மோசமான விமர்சனம்: சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ன என்று இமான் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், டி.இமான் தனது முன்னாள் மனைவி மோனிகாவை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று, சோஷியல் மீடியாவில் படுமோசமான கருத்துக்கள் வலம் வந்தன.
போட்டோ அரசியல்: இந்த சர்ச்சை தற்போது சற்று ஓய்ந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து பேசிய சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சிவகார்த்திகேயன் குடும்ப போட்டோவை போட்டதற்கு பின் ஒரு அரசியல் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் டிராமா: சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சனையில் உள்ள உண்மை என்ன என்பது பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டது அதை சரி செய்வதற்காகத்தான் அந்த போட்டோ. இமான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என்னால் குடும்பத்தோடு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இமான் சொன்னது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் டிராமா போட்டுள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications











