அடுத்த சிவகார்த்திகேயன் கவினா? இணைய கூலிப்படை வைத்து இருக்கிறார்.. பிஸ்மி சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார் கவின். அவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவி வருது. இதுகுறித்து பேசிய பிஸ்மி, கவினின் வளர்ச்சி இயல்பானது இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கவின் நடித்த டாடா திரைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் அப்பாவாகவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் கவினின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். மே 10ந் தேதி வெளியான இந்த படத்தில், லால், அதிதி போகாங்கர், கீதா கைலாசம், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Valai pechu bismi talk about Kavin s huge fan base on social media

கவினின் ஸ்டார்: யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தில், ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன், பெரிய ஹீரோவாக மாறுவது பற்றிய படமாகும். இப்படத்தில், கவினின் மாறுபட்ட நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கவின் வந்துள்ளதால், அவரை ரசிகர்கள் அடுத்த சிவகார்த்திகேயன் என்று கொண்டாடி வருகின்றனர்.

இணைய கூலிப்படை: இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த பிஸ்மி, கவினின் வளர்ச்சி இயல்பானது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் வளர்ந்து வரும் இந்த கட்டத்திலேயே இணைய கூலிப்படைகளை வைத்து இருக்கிறார். இதன் காரணமாக இணையத்தில் அவரை பில்டப் செய்கிறார்கள். கவின் பிக் பாஸூக்கு போன போது, கவின் ஆர்மி என்று எல்லாம் வந்தது. முன்பு ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின் தான், ஓவியா ஆர்மி உருவானது. ஆனால், கவின் பிக் பாசுக்கு செல்வதற்கு முன்பே கவின் ஆர்மியை உருவாக்கிவிட்டு உள்ளே சென்றார்.

ஸ்டார் சுமாரான படம் தான்: அதன் பின் கவின் சினிமாவிற்கு வந்து அந்த ஆர்மியை செயல்படுத்தி வருகிறார். தற்போது ஸ்டார் படம் வெளியான பிறகு, கவினை சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். உண்மையில் ஸ்டார் படத்தின் வசூல் என்பது ஓரளவிற்கு உள்ளது. படமும் சுமாராகத்தான் இருக்கு என்பது படம் பார்த்தவர்கள் சொல்வது. ஆனால், சோஷியல் மீடியாவில், ஸ்டார் படத்தை டைட்டானிக் படத்திற்கு நிகராக கொண்டாடி வருகிறார்கள். இது கவினின் ஐடி விங்கின் வேலை என்று பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X