பார்த்திபன் எதுக்கு வாடகை வீட்டில் இருக்கிறார்.. இதற்கான காரணத்தை உடைத்த பிஸ்மி!
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்போது டீன்ஸ் என்கிற படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், தனக்கு சொந்த வீடு கூட இல்லை என்று பேசி இருந்தார்.
இதுகுறித்து பேசிய பிஸ்மி, அவர் வாடகை வீட்டில் இருக்கும் அளவிற்குத்தான் சம்பாதிக்கிறாரா என்று செய்தியாளர்கள் அவரை நோக்கி கேட்க வேண்டும், ஏன் என்றால், சினிமாக்காரர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள் நினைத்தால் எத்தனை சொகுசு வீடு வேண்டுமானாலும் வாங்க முடியும், ஏன் என்றால் அவர்கள் வாங்குகிற சம்பளம் அவ்வளவு. சாதாரண மக்கள் என்ன வேலைப்பார்க்கிறார்கள் அவர்களின் சம்பளம் என்ன என்று அனைவருக்கும் தெரியும், நம்மைவிட பல மடங்கு சம்பளம் வாங்கும் அவர்களால் சொந்தமாக வீடு வாங்க முடியாதா என்ன. ஆனாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக சொந்தவீடு வாங்காமல் வாடகை வீட்டில் இருக்கிறார்கள்.

ஏழ்மையின் அடையாளம்: ஆனால், அதை ஏழ்மையின் அடையாளமாக சொல்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடுடியாது. இவர் மட்டுமில்ல பலரும் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன், வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அரசியல்வாதிகள் பல பேர், கோடி கோடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு இப்பவும் வாடகை வீட்டில் தான் இருப்பதாக சொல்லுவார்கள். இதனால், வாடகை வீட்டில் இருப்பது என்பது ஏழ்மையின் அடையாளம் இல்லை என்று பிஸ்மி கூறியுள்ளார்.
டீன்ஸ் படத்தின் கதை : டீன்ஸ் படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்தப் படத்தை பயாஸ்கோப் நிறுவனமும், அக்கிரா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பார்த்திபன் இந்த படத்தை இயக்க டி. இமான் இசையமைத்துள்ளார். ஒரே வகுப்பில் படிக்கும் 2கே கிட்ஸ் 13 பேர் பள்ளியை கட் அடித்து விட்டு அவர்களில் ஒருவருடைய பாட்டி வீட்டிற்கு செல்ல திட்டமிடுகின்றனர். அங்கு சென்று அமானுஷ்ய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள புறப்படுகின்றனர்.
விமர்சனம்: அங்கு போற வழியில் அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை பார்த்திபன் அவரது ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த டீன் ஏஜ் குழந்தைகள் 13 பேர் பள்ளியை கட் அடித்து விட்டு அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏற்படும் அமானுஷ்யங்கள் ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை படம் பார்க்கும் நமக்கும் தூண்டுகிறது.


Click it and Unblock the Notifications











