கடைசில அது க்ளோனிங்கா? ஒன்னுமே புரியலயே.. கோட் படத்தை விளாசிய பிஸ்மி!
சென்னை: விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
கோட் படம் வெளியான முதல் நாளிலேயே முதல் நாளில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கோட் படத்தை பார்த்த பிஸ்மி, படத்தில் உள்ள குறைகள் குறித்து வெளிப்படையாக பேசி கிண்டல் அடித்துள்ளார்.

ஒன்னுமே தெரியல: அதில், கோட் படத்தில் பணியாற்றிய ஒரு நண்பர் என்னிடம் பேசும் போது ஒரு விஷயத்தை சொன்னார் அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதாவது கோட் படத்தில் மகன் விஜய் கதாபாத்திரத்தில் வரும் ஜீவனை, அப்பா விஜய்யாக வரும் காந்தி கிளைமாக்ஸ் காட்சியில் போட்டுதள்ளிவிடுவார். அதன்பின் ஜீவனின் க்ளோனிங் அடுத்த பாகத்தில் வரும் என்பது போலத்தான் படம் முடிக்கப்பட்டது. நானும் அப்படித்தான் புரிந்து கொண்டாம்.
துயரமான விஷயம்: ஆனால், இந்த படத்தில் ஜீவனாக வந்தவன், மீனாட்சி சௌத்ரியை கொல்வது இப்படி எல்லா வேலைகளை செய்வது க்ளோனிங் தானாம், கடைசியில் வரும் காட்சியில் வருவது தான் விஜய்யின் மகனாம் இதை அந்த நண்பர் சொன்னது நான் ஷாக்காகி விட்டேன். இயக்குநர் ஒரு விஷயத்தை நினைத்து படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால், செய்த அந்த விஷயம் ஆடியன்சுக்கும் தெரியல, மீடியாவிற்கும் புரியல என்பது தான் துயரமான விஷயம். திடீரென வெங்கட் பிரபு ஏன் செல்வராகவன் போல மாறிவிட்டார் என்று தெரியவில்லை.
குழப்பிவிட்டார்: வெங்கட்பிரபு, ஜெமினி மேன் திரைப்படத்தை பார்த்து அதில் இன்ஸ்பெயர் ஆகித்தான் இந்த படத்தை எடுத்து இருகிறார். அந்த படத்தில் வில் ஸ்மித்தை போட்டு தள்ள ஒரு டீம் பிளான் பண்ணி வில் ஸ்மித் போல ஒரு க்ளோனிங்கை செய்வார்கள். ஆனால், படத்தின் கிளைமாக்ஸில், வில் ஸ்மித் தன்னையும் காப்பாற்றிக்கொண்டு க்ளோனிங்கையும் காப்பாற்றுவார். அந்த கதையை அப்படியே எடுத்துவிட்டால் ட்ரோல் செய்துவிடுவார்கள் என்று மாற்றி எடுத்து இருக்கிறார். ஆனால், அவர் என்ன சொல்ல வந்தார் என்பதே யாருக்கும் புரியவில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி கோட் படத்தை கழுவி ஊற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











