Jayam Ravi:வசூலில் அடிவாங்கிய பிரதர்.. ஜெயம் ரவியின் தலையில் மொய் எழுதிட்டாங்களாமே.. இதுதான் விஷயமா

சென்னை: தீபாவளிக்கு வெளியான நேரடியான மூன்று தமிழ் படங்களில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படமும் ஒன்று. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதர் படத்தினால் ஜெயம் ரவிக்கு ரூபாய் 4 கோடிகள் வரை வீண் செலவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து நேரடியாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த மூன்று படங்களில் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தினைப் பெற்ற படம் என்றால் அது பிரதர் படம்தான். படத்தின் முதல் பாதி மிகவும் மொக்கையாக இருப்பதாகவும் படத்தில் சரியான கன்ட்டியுனிட்டி இல்லை எனவும் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

valai pechu jayam ravi brother

மேலும் படத்தில் திறமையான நடிகர்கள் இருந்தும் படத்தில் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டனர். படத்தின் இரண்டாம் பாதிதான் ஓரளவுக்காவது உள்ளது என ரசிகர்கள் கூறினர். இதனால் தீபாவளி ரிலீஸ் படங்களில் வசூல் ரேஸில் அதிக அடிவாங்கிய படம் என்றால் அது பிரதர் படம்தான்.

valai pechu jayam ravi brother

பிரச்னை: படத்தில் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இடம் பெற்றுள்ள மக்கா மிஷி பாடல்தான் என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வலைபேச்சு யூடியூப் தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், "பிரதர் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ரூபாய் 4 கோடிகள் வரை வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

valai pechu jayam ravi brother

4 கோடிகள்: அதாவது, பிரதர் படத்தின் வட இந்திய ரிலீஸ்களை வாங்கிய விநோகஸ்தர் இறுதியாக படத்தினை வேண்டாம் எனக் கூறிவிட்டதாகக் கூறியதாகவும், தான் ஏற்கனவே செலுத்திய சுமார் 21 கோடிகள் வரை திரும்பக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு பணத்தினை புரட்டியுள்ளார். ஆனால் அப்போதும் ரூபாய் 4 கோடிகள் வரை பற்றாக்குறையாக இருந்துள்ளது.

valai pechu jayam ravi brother

சம்பளம்? : இறுதியாக படத்தின் நடிகர் ஜெயம் ரவி தனது சொந்தப் பணத்தினை ரூபாய் 4 கோடிகள் வரை கொடுத்து பிரச்னையை முடித்துள்ளார். அதனால்தான் படம் வெளியாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இதன்படி பார்த்தால் இந்தப் படத்தில் ஜெயம் ரவி சம்பளம் இல்லாமல்தான் நடித்துக் கொடுத்துள்ளார் போல என்ற பேச்சுகளும் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X