கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய படக்குழு... இது யார் செய்த குறும்பு!
நான் செய்த குறும்பு பட விழாவில் ஐந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
Recommended Video

சென்னை: கயல் சந்திரனின் நான் செய்த குறும்பு பட விழாவில் ஐந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
கயல் சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கும் இப்படத்தை ரைட்டர் இமேஜினேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக சினிமா தொடக்க விழா அனைத்தும், சம்பிரதாய சடங்குகளுடன் தான் நடக்கும். ஆனால் இப்படத்தின் துவக்க விழா வித்தியாசமான முறையில் நடந்தது.
வடபழனி பிரசாத் லேபில் உள்ள விநாயகர் கோயிலில் முதலில் பூஜை போடப்பட்டு, பின்னர் விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த ஐந்து பெண்களுக்கும், மாலையிட்டு நலங்கு வைத்து, புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர்.

படக் குழுவின் சார்பில் ஐந்து பெண்களுக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. படக்குழுவினர் அனைவரும் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களுக்கு சுகப்பிரசவம் தொடர்பான நூல்கள் வழங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications











