அந்தகன் படம் மிகப்பெரிய ஆச்சர்யம்.. சிம்ரனிடம் அடிவாங்கும் பிரஷாந்த்.. வலைப்பேச்சு அந்தணன் வியப்பு!
சென்னை: நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த படத்தை பிரசாந்தின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தியாகராஜன் இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தியாகராஜன் -பிரஷாந்த் கூட்டணியில் முன்னதாக வெளியான படங்கள் சரியாக போகாத நிலையில் அந்தகன் படம் அனைத்தையும் மீறி வெற்றி நடை போட்டு வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த்: நடிகர் பிரசாந்தின் அந்தகன் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. நடிகர் பிரஷாந்த் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படம் பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக வெளியாகி உள்ளது. அந்தகன் படத்தை பிரஷாந்தின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.
அந்தகன் படம்: இந்தப்படம் பிரஷாந்த்திற்கு மிகப்பெரிய மாஸ் ரீ-என்ட்ரியாக அமைந்துள்ளது. தியாகராஜன் இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு முன்னதாக தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படங்கள் வெளியான நிலையில் அந்த படங்கள் சரியான கவனத்தை பெறவில்லை. அதேபோன்ற ஒரு நிலையைத்தான் அந்தகன் படமும் கொடுக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் தன்னுடைய கணிப்பை அந்தகன் படம் பொய்யாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்தணன் பேட்டி: தன்னுடைய படங்களில் தன்னுடைய மகனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தியாகராஜன், இந்த படத்தில் அப்படி இல்லாமல் படத்தின் மற்ற நடிகர், நடிகைகளுக்கும் சரியான ஸ்பேசை கொடுத்துள்ளதாகவும் அந்தணன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு சில இடங்களில் பிரசாந்தை காட்டிலும் சிம்ரன் அதிக ஸ்கோர் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள அந்தணன் சில இடங்களில் பிரஷாந்த் சிம்ரனிடம் அடிவாங்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மொத்தத்தில் இந்த படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யான கணிப்பு: தான் தன்னுடைய முந்தைய பேட்டிகளில்கூட விஜய்யின் கோட் படத்திற்கு பிறகு அந்தகன் படம் வெளியாகி இருந்தால் விஜய்யுடன் பிரஷாந்த் நடித்ததை ப்ரமோஷனாக கொண்டு அந்தகன் படம் வெற்றி பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் தன்னுடைய கணிப்பையும் அந்தகன் படம் பொய்யாக்கி தற்போது மிகப்பெரிய மேஜிக்கை செய்துள்ளதாகவும் அந்தணன் தன்னுடைய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளா.ர். இதுவரை படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை மட்டுமே கூறி வருவதாகவும் அந்தணன் மேலும் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











