விஜய்யை பார்த்து பலருக்கு வயிறு எரியுது? வலைப்பேச்சு அந்தணன் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தளபதி விஜய் கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு இந்த விழா சென்னையில் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து எழுந்து வரும் விமர்சனத்திற்கு குறித்து சினிமா விமர்சகரான அந்தணன் தனது வீடியோவில் பேசி உள்ளார்.

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, அதிகாலையிலேயே விஜய் வருகை தந்தார். அவர் காரில் இருந்து இறங்கும் போதே அங்கே கூடி இருந்த அனைவருக்கும் கைகளை அசைத்து, வணக்கம் கூறினார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி விஜய், தமிழகத்துக்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை என்று அழுத்தி கூறினார். அதே போல் உண்மையை பொய் மாதிரியும், பொய்யை உண்மை மாதிரியும் சமூக வலைத்தளத்தில் பல செய்திகள் பரவுகிறது. ஆனால் அதில் எது உண்மை என்பதை அடையாளம் காண வேண்டும் என்றார். இதையடுத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

Vijay andhanan

அந்தணன் பேச்சு: இணையத்தில் இன்று டிரெண்டாகி வரும் இந்த விஷயம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சமுதாயத்தை இதே இடத்தில் வைத்து இருக்க வேண்டும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதில் அரசியல் கட்சிகளும், நடிகர்களும் மிகவும் தெளிவாக இருப்பார்கள். ஆனால், அங்கிருந்து வந்த நடிகர் விஜய், இன்று அரசியல் கட்சித் தொடங்கி 234 தொகுதியில் இருக்கும் மாணவ மாணவிகளை அழைத்து கல்வி உதவித்தொகை வழங்குவது, பரிசு அளிப்பது, ஊக்கப்படுத்துவது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செய்து வருகிறார். இதற்குபின் அரசியல் இருக்கு என்று பலர் சொன்னால் கூட, பழம் பழுத்துவிட்டதால், அந்த பழம் குறித்து பலர் விமர்சனம் செய்வார்கள்.

என் முன்வரவில்லை: இன்னைக்கு விஜய் மாணவர், மாணவிகளை அழைத்து உதவி செய்துள்ளார். விஜய்யைப் பார்த்த மாணவர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. மாணவர்களின் அதிகபடியான மகிழ்ச்சி வேண்டுமானால், விஜய் காரணமாக இருக்கலாம். மற்றபடி, மாணவர்களுக்கு யார் ஊக்கம் கொடுத்து இருந்தாலும், அவர்கள் இதே மகிழ்ச்சியோடுத்தான் இருப்பார்கள். இதை ஏன் எந்த அரசியல் கட்சிகளும் செய்ய முன்வருவது இல்ல. இலவச வேட்டி, சேலை, அரிசி என பலவற்றை கொடுக்கும் இவர்கள், ஒரு மாவட்டத்தில் நன்றாக படிக்கும் மாணவனுக்கு ஏன் உதவும் எண்ணம் வரவில்லை.

ஏன் எரிச்சல்: ஆனால், இதை இப்போது விஜய் செய்து வருகிறார், இதை அவர் அரசியலுக்காக செய்கிறார், ஓட்டுக்காக செய்கிறார் என்றே இருந்தாலும், இளம் மாணவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அவர் கொடுக்கிறார். இதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். விஜய்யை விமர்சனம் செய்ய ஆயிரம் காரணம் இருக்கு. ஆனால், கல்வி, உதவி என்று வரும் போது தயவு செய்து அதை விமர்சனம் செய்யாதீர்கள். 234 தொகுதியில் இருக்கும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர் என அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, பாதுகாப்பாக தங்கவைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இதை கை தட்டி பாராட்டாமல், ஏன் விஜய்யை பார்த்து என் வயிறு எரிகிறீர்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X