மியூட் செய்யாத கெட்டவார்த்தை.. லியோ டிரெய்லர் இதை கவனிச்சீங்களா? வலைப்பேச்சு அந்தணன் விளாசல்!
சென்னை: லியோ படத்தின் டிரைலர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், டிரைலர் குறித்து வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மாஸ்டர் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ.

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது
சலசலப்பை ஏற்படுத்திய டிரைலர்: லியோ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு, விஜய் பேசும் கெட்டவார்த்தை. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. முன்னணி நடிகர் ஒருவர் இப்படி தரக்குறைவாக வார்த்தை பேசலாக என்கிற குற்றச்சாட்டு முன்வந்துள்ளது.
மாற்றுக்கருத்து இல்லை: லியோ திரைப்படத்தின் டிரைலர் சாதனை படைத்து வரும் நிலையில், வலைப்பேச்சு அந்தணன் டிரைலர் குறித்து பல சுவாரசியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், டிரைலர் ரசிகர்கள் கொண்டாடும் டிரைலராக இருக்கிறது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது. விஜய் என்ன செய்தால், ரசிகர்களுக்கு பிடிக்குமோ அது இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.
ஆபாச வார்த்தைகள்: ஆனால், டிரைலரில் வரும் ஆபாச வார்த்தையை தவிர்த்து இருக்கலாம். ஏன் என்றால், விஜய்க்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து இருக்கும் விஜய், தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பயன்படுத்த வேண்டும். டிரைலர் வெளியாகி சில மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பாலோவர்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது இப்படி கெட்டவார்த்தை வருவதை தவிர்த்து இருக்கலாம்.
தவிர்த்து இருக்கலாம்: என் விஜய் படங்களில் கெட்டவார்த்தை வராது என்று விஜய் தார்மீகமாக ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளம் இயக்குநர்களின் பல திரைப்படங்களில் கெட்டவார்த்தை இருப்பதை ஸ்டைலாகப் பார்ப்பதால், பல திரைப்படங்கள் கெட்டவார்த்தையுடன் தான் வெளியாகியின்றன. ஆனால், கோடான கோடி ரசிகர்களை வைத்து இருக்கும் விஜய் இதை நிச்சயம் தவிர்த்து இருக்கணும் என்றார்.
லியோ டிரெய்லர் இதை கவனிச்சீங்களா? மேலும்,இணையத்தில் சிலர் லியோ டிரெய்லரில் வட்டத்தை போட்டு இது எல்சியூ, இதை கவனிச்சீங்களா? என்று பேசி வருகிறார். படம் தொடங்கும் போது, கமல் வாய்ஸ் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன படத்தை படமாக பாருங்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசினார்.


Click it and Unblock the Notifications











