நயன்தாராவின் தலைக்கணம்.. மோதலுக்கு காரணம் பணம் மட்டும் இல்ல.. அந்தணன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், இருவரின் பிரச்சனைக்கு காரணம் பணம் மட்டும் இல்லை, நயன்தாராவின் தலைக்கணம் தான் என பல விஷயத்தை கூறினார்.
தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை, எப்போ விக்னேஷ் சிவன், நயன்தாராவோட லைஃப்குள்ள வந்தாரோ அன்னையிலிருந்து, காற்புணர்ச்சியோடு இருந்தாரு தனுஷ். அதனுடைய வெளிப்பாடு தான் இவர்கள் இருவருக்கும் இடையே இப்ப நடக்கும் மோதலுக்கு முக்கிய காரணம். ஒரு சாதாரணமான அசிஸ்டன்ட் டைரக்டர், ஒரு மிகப்பெரிய நடிகையை திருமணம் செய்து கொள்வதை தனுஷூக்கு பிடிக்கவில்லை. அவருக்கு மட்டுமில்லை நயன்தாராவை காதலித்து ஏமாந்து போன பலருக்கும் பிடிக்கவில்லை.

சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த தனுஷ்: தன்னோடு நெருங்கி பழகிய ஒரு நடிகையை, திடீரென்று வந்த ஒருவன் தட்டிக்கொண்டு போவதை யாருமே விரும்ப மாட்டார்கள். இது மட்டும் பிரச்சனைக்கு காரணம் இல்லை. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் போது இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதம், தனுஷை மிகவும் பாதித்துவிட்டது. இதற்காக பழி வாங்குவதற்காக ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து காத்துக் கொண்டிருந்தார் தனுஷ், அதற்கான சந்தர்ப்பம் வந்ததும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
நயன்தாரா செய்த தவறு: நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிளிக்சுக்கு விற்கவில்லை என்றால், எந்த பிரச்சனையும் வந்து இருக்காது. ஆனால், நயன் தனது திருமணத்தை விற்று 18 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, தனுஷிடம் முறையாக சென்று பேசி இருக்க வேண்டும், ஆனால், நயன் அப்படி செய்யாமல், குறுக்குவழியில் தனுஷின் மேனேஜரிடம் பேசி அனுமதி வாங்க நினைத்தார்கள், அதற்கு தனுஷ் ஒத்துக்கொள்ளாவில்லை. பின், நயன்தாரா, தனுசை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். முதலில் வேண்டாம் என்று சொன்ன தனுஷ், நயன்தாரா தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் மீட் பண்ண சம்மதித்தார். ஆனால், நயன்தாரா, தனுசை தன்னுடைய அலுவலகத்தில் வந்து பார்க்க சொன்னதால், தனுஷ் கடுப்பாகி, அந்த வீடியோவிற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.
தனுஷ் குடும்பத்தில் பிரச்சனை: பல நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை நயன்தாரா அறிக்கையாக வெளியிட்டு, தனுஷின் மீது வன்மத்தை கொட்டி தீர்த்துவிட்டார். தனுஷ் அனுமதி இல்லாம அந்த நானும் ரவுடிதான் படத்தோட கிளிப்பிங்கை அந்த ஆவணப்படத்தில், பயன்படுத்தினது தப்புதான். அதுக்கு தனுஷ் 3 கோடி ரூபாய் கேட்டதில் தப்பே இல்ல. தனுசுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணதுல மிகப்பெரிய வருத்தம் இருக்கு இன்னிக்கு தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணமே நயன்தாரா தான். அதுதான் இன்று தனுஷ் குடும்பத்தில் புயலை கிளப்பி உள்ளது. இதனால், இவர்கள் இருவரின் மோதலுக்கு காரணம் பணம் மட்டும் பிரச்சனை இல்லை, நயன்தாராவின் தலைக்கணம் தான் காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











