நயன்தாரா பத்தி நான் சொல்லவா? பூகம்பமே வெடிக்கும்.. கொந்தளித்த அந்தணன்!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா அளித்த பேட்டி பெரும் பேசுபொருளாகி உள்ளது. அந்த பேட்டியில், என்னை பற்றி வதந்திகளை பேசும் 3 நபர்கள் உள்ளனர். அவர்கள் பெரிய பிரபலங்கள் இல்லை. அந்த 3 குரங்குகள் பற்றி நான் இப்போது பேசுவதால் கூட அவர்கள் பிரபலமாக வாய்ப்புள்ளது என்று பேசி இருந்தார். வலைப்பேச்சு டீமை அவர் விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்தணன் அளித்துள்ள பேட்டியில் நயன்தாரா பத்தி நான் சொல்லவா? என கேட்டுள்ளார்.
நயன்தாரா அந்த பேட்டியில் குரங்கு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். அந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம். எங்கள் மீது, எவ்வளவு கோபத்தில் இருந்தால் அப்படி பேசி இருப்பார். ஒருவேளை கேமரா இல்லாமல் கேட்டிருந்தால் கெட்ட வார்த்தையால் கூட திட்டி இருக்கலாம். நயன்தாராவின் இந்த பேச்சுக்கு பிஸ்மி அவர்கள், உங்க குடும்ப போட்டோவை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் இது தேவையா? நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடாது அவர் குரங்கு என்று சொல்வதனால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால், மிகப்பெரிய நடிகையாக இருக்கும் நயன்தாரா, பல ரசிகர்களை வைத்திருப்பவர், இது போன்ற வார்த்தையை பொதுவெளியில் தவிர்த்து இருக்கலாம்.

நயன்தாராவிற்கு மரியாதையே இல்லை: எங்களுடைய சேனல் சினிமா சம்பந்தமான சேனல், இந்த சேனலில், சினிமா சம்பந்தமான செய்திகளை தான் நாங்கள் பேசுவோம். நயன்தாராவை பற்றி பேசவில்லை என்றால் தான். அவர் வருத்தப்பட வேண்டுமே தவிர பேசியதற்காக அவர் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. 50 வீடியோவில் 45 வீடியோ என்னைப் பற்றியே பேசி, பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் பொய்யானது நயன்தாராவின் வீடியோவை யாரும் பார்ப்பதே இல்லை. ஜிபி முத்துக்கு இருக்கும் மரியாதை கூட நயன்தாராவுக்கு இல்லை என்பது தான் உண்மை, இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் நயன்தாரா தன்னை ஒரு பெரிய நடிகையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
உண்மையைத்தான் சொன்னோம்: மேலும் நயன்தாரா, தனுஷ் மோதல் விவகாரத்தில், உண்மைகளை வெளியில் சொன்னது நாங்கள் தான். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகாமல் இருப்பதற்கு தனுஷ் என்ஓசி கொடுக்காதது தான் காரணம் என்று மூன்று மாதத்துக்கு முன்பே நாங்கள் எங்கள் சேனலில் சொல்லிவிட்டோம். அதுமட்டுமில்லாமல், என்ஓசி வாங்க நயன்தாரா செய்த குறுக்குவேலைகளை நாங்கள் அப்பட்டமாக சொன்னோம். அதுமட்டுமில்லாமல், நயன்தாரா வெளியிட்ட டாக்குமெண்டரி வீடியோவில் சுவாரஸ்யமே இல்லை என்று நாங்கள் கூறினோம். இப்படி அனைத்து ரகசியத்தையும் நாங்கள் சொல்வதால், நயன்தாரா எங்கள் மீது கோபமாக இருக்கிறார்.
நயன்தாரா பத்தி நான் சொல்லவா: நயன்தாரா நடிகையாக இருப்பதால் தான், நாங்கள் அவரை பற்றி பேசுகிறோம். அவர் நடிகையாக இல்லை என்றால் நாங்கள் அவர் குறித்து பேசி இருக்கவே மாட்டோம். எங்கள் சேனலில் எப்போதும் நாகரிகத்தோடு தான், பல கருத்துக்களை கூறியிருக்கிறோம். அநாகரிகமாக அடுத்தவரின் வீட்டு கதவைத் தட்டி எந்த கருத்துக்களையும் எங்கள் சேனலில் வெளியிட்டது இல்லை. சினிமா குறித்து வெளியில் சொல்லமுடியாத பல தகவல்கள் எனக்கு வரும், அதை நான் வெளியில் சொன்னால், பூகம்பமே வெடிக்கும். ஆனால், நாகரீகம் கருதி அதை வெளியில் சொல்லவில்லை. இப்படி நாகரீகமாக நாங்கள் எங்கள் கருத்தை முன்வைக்கும் போது நீங்களும் நாகரீகமாக பேசுவதே சரி.
எல்லாமே பொய்: அதேபோல, அந்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை படத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் அது உண்மை இல்லை. ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகும் முன்பே நயன்தாரா, ப்ரமோஷனுக்கு வர மாட்டேன் என்றும், டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டும் என்று தான் அக்ரிமெண்டிலேயே கையெழுத்து போடுவார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நயன்தாரா ஒரு பேட்டியில் உட்கார்ந்து கொண்டு பொய்யாகவே பேசி இருக்கிறார். மக்கள் இவர் பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்பிவிடுவார்களா என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











