அஜித் -விஜய் தலைகீழாக நின்றாலும் தங்கலான் போன்ற படத்தில் நடிக்க முடியாது.. வலைப்பேச்சு அந்தணன் பளீச்
சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது தங்கலான் படம். படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி முடித்துள்ள சூழலில் படம் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படத்தில் அந்த கேரக்டராகவே மாறியுள்ளார் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு குறித்து வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அந்தணன் உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதுப்போன்ற மெனக்கெடலுடன் நடிக்க விக்ரமால் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் கலையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும் தங்கலானாக விக்ரமின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படத்தை அவர்தான் மிகச்சிறப்பாக தாங்கி நிற்பதாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அசாத்தியமான விக்ரம் உழைப்பு: இந்நிலையில் இந்த படம் குறித்து வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பேசியுள்ள அந்தணன் படத்தின் ப்ரோமோஷனின்போது விஜய், அஜித் போன்று அதிகமான ரசிகர்கள் இல்லாதது குறித்த கேள்வியை விக்ரம் எதிர்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அஜித், விஜய் தலைகீழாக நின்றாலும் தங்கலான் போன்ற படத்தில் அவர்களால் விக்ரம் போல மாஸ் காட்ட முடியாது என்று அந்தணன் தெரிவித்துள்ளார். படத்தில் விக்ரமின் உழைப்பு அசாத்தியமானது என்று தெரிவித்துள்ள அவர், ஒரு கட்டத்தில் படத்தில் நடிப்பது விக்ரம் என்ற தோற்றத்தையே அவர் மறக்கடித்து விடுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சின்ன சின்ன உடல்மொழி: படத்தில் சின்ன சின்ன உடல் மொழியையும் அவர் சிறப்பாக்கியுள்ளதாகவும், கம்பை வைத்துக்கொண்டு கம்பீரமாக நடந்து வரும் தொனி மிகவும் பாராட்டுக்குரியதாக அமைந்திருந்ததாகவும் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பாராட்டப் பட்டுள்ளது. எப்போதும் தன்னுடைய பிட்னஸில் மிகுந்த அக்கறை கொண்டவர் நடிகர் விக்ரம். ஆனால் இந்தப் படத்தில் அவர் தொப்பையுடன் நடித்துள்ளது ரசிகர்களின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது. இந்த கேரக்டருக்கு இப்படிப்பட்ட பிட்னஸ்தான் தேவை என்பதை உணர்ந்து அவர் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அடுத்த பாகம் குறித்து விக்ரம் பேச்சு: இந்தப் படம் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்து வருகிறது. இதனிடையே, இந்தப் படத்தின் 2வது மற்றும் 3வது பாகங்களை எடுப்பதற்கும் கதைகள் உள்ளதாக நடிகர் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் ஒரு கதைக்களத்தை மட்டுமே இந்தப் படம் பதிவு செய்துள்ளதாகவும் இதுபோன்ற பல கதைகள் அந்த இடத்திற்கு சொந்தமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











