Leo Collection - லியோவை விஜய் அனாதையாக விட்டுட்டார்.. 1000 கோடி ரூபாய் வசூலிக்குமா?.. அந்தணன் கொடுத்த ஷாக்?

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்குமா என்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் வசூல் ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள் அறுதியிட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கண்டிப்பாக 1000 கோடி ரூபாயையும் வசூலித்துவிடும் என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.

Valaipechu Anthanan has released a video About Leo will collect 1000 crore rupees

கலவையான விமர்சனம்: படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறினாலும் பொதுவான ரசிகர்கள் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படமா இது என்ற தொனியில்தான் படம் இருப்பதாக அவர்கள் ஓபனாகவே சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் என்றுதான் கூறப்படுகிறது.

வசூல் செய்யுமா?: மேலும் லியோ படத்தின் ரிசல்ட்டை படக்குழு முன்னரே கணித்ததால்தான் ஒழுங்காக ப்ரோமோஷன்கூட செய்யவில்லை என்ற பேச்சும் இன்று காலையிலிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

லியோ அனாதை: அந்த வீடியோவில் பேசிய அவர், "விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ஏன் இப்படி பண்ணினார் என்று தெரியவில்லை. வன்முறை படங்களுக்கு தீர்வு வர வேண்டும். லியோ படம் 1000 கோடி ரூபாய் வசூலை தொடும் என்ற கனவில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் இந்தப் படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க படத்தை சுற்றி நெகட்டிவ் விஷயங்களும், குழப்பங்களுமே நடந்துகொண்டிருந்தன.

விஜய் ஒதுங்கிவிட்டார்: ஒருபக்கம் விஜய் இந்தப் படத்தை அனாதயாக விட்டுவிட்டு எப்படியோ போகட்டும் என்று ஒதுங்கிவிட்டார். இந்தப் படத்தை அவர் முன்னரே பார்த்து இது தேறாது என்று முடிவெடுத்துதான் விலகியிருப்பார் போல. இவரெல்லாம் ப்ரோமோஷன் கொடுக்காமல் படம் எப்படி 1000 கோடி ரூபாயை நெருங்கும் என்பது தெரியவில்லை. படக்குழுவே பிற மாநிலங்களில் பத்திரிகையாளர் சந்திப்புக்கூட வைக்கவில்லை. அதனால் 1000 கோடி ரூபாய்க்கு வாய்ப்பே இல்லை.

ஜெயிலரை தாண்டுமா: அடுத்ததாக ஜெயிலர் வசூல் செய்திருக்கும் 700 கோடி ரூபாயை தாண்டிட்டால் போதும் என்று நினைப்பார்கள். ஜெயிலர் வசூலை தாண்ட வேண்டும் என்ற நெருக்கடி விஜய்க்கு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் சர்ச்சை எழுந்தவுடன் ரஜினி சில காய்களை நகர்த்தினார். ஜெயிலர் படக்குழுவும் இறங்கி வேலை செய்தது. அதனால் அந்தப் படம் 700 கோடி ரூபாயை எடுத்தது.

ஆனால் லியோ படம் 15 நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. லியோ படக்குழு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் படம் வெளியான பிறகும் ரசிகர்களிடம் ஒட்டவில்லை. எனவே லியோ படம் 700 கோடி ரூபாயையும் தொடாது என்பதுதான் எதார்த்தம். அதை இன்று சொன்னால் விஜய் ரசிகர்களுக்கு கசக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X