Shri: 2 வருஷத்தில் வாழ்க்கையே இப்படி ஆகிபோச்சே.. ஸ்ரீக்கு மருத்துவ உதவி தேவை.. அந்தணன் வேதனை!
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுக நடிகர் ஸ்ரீ, எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதைப்பார்த்த பலர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி ஆகிவிட்டார் என கேள்வி கேட்டு வரும் நிலையில், பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்திருக்கும் பேட்டியில், ஸ்ரீ மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என பேசி உள்ளார்.
இணையத்தில், நேற்று நடிகர் ஸ்ரீ அவர்களின் புகைப்படத்தை பார்த்ததும் முதலில் அது அவர் தானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதன் பிறகு சில நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினேன். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில் அவர் பேசி உள்ளதை பார்த்த போது தான், அது ஸ்ரீ தான் என்று தெரியவந்தது. ஸ்ரீயை பார்த்ததும் எனக்கு மிகவும் வேதனையாக தான் இருந்தது. அவர் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், மனநோயாளியாக இருக்கிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. அவர் வேண்டுமென்றே அவ்வாறு ஆகவில்லை. அவர் மனநோயாளியாக மாறிவிட்டார் அதிலிருந்து அவரை மீட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு திரை உலகத்தினுடையது.

நடிகர் ஸ்ரீ: எனக்குத் தெரிந்து அவருக்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை அப்படி யாராவது இருந்திருந்தால், இந்த அளவுக்கு அவரை விட்டு இருக்கா மாட்டார்கள். நடிகர் ஸ்ரீ இப்படி ஒரு பிரச்சனைகள் இருக்கிறார் என்பது நடிகர் சங்கத்தின் காதுக்கு நிச்சயமாக சென்று இருக்கும். இதனால், நடிகர் சங்கம் ஸ்ரீயின் விஷயத்தில் தலையெட்டு, முதலில் அவரை அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்ற வேண்டும். நடிகர் சங்கம் இதை செய்யுமா என்பது எனக்கு தெரியாது.

இரண்டு வருடத்தில் இப்படியா: பொதுவாகவே நடிகர்கள் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர்களிடம் தொடர்ந்து நட்பாகவே பழகி வருவார்கள். நல்ல நாள் என்றால் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். ஆனால் ஸ்ரீ, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் இணக்கமாக இருந்தாரா என்று தெரியவில்லை. அதேபோல, அவரை வீடியோவில் பார்க்கும்போது தனியாகத்தான் இருக்கிறார். நண்பர்கள் இல்லாதவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நண்பர்கள் என்பது நம்முடைய மருந்து போன்றவர்கள், எவ்வளவு மன வலியோடு இருந்தாலும் ஒரு பத்து நண்பர்களோடு சேர்ந்து விட்டால் அந்த மன வலி மறைந்து விடும். ஆனால் நடிகர் ஸ்ரீயின் விஷயத்தில் என்ன நடந்தது... ஸ்ரீக்கு என்ன ஆனது.. இல்லை இவருடைய நண்பர்கள் அனைவரும் குடிக்க அடிமையானவர்களா.. அதன் தாக்கத்தினால் ஸ்ரீ எப்படி ஆகிவிட்டாரா என பல கேள்விகள் மனதிற்குள் எழுகிறது.
பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற ஸ்ரீ ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி வந்துவிட்டார். அதற்கு காரணம் என்ன என்று அப்போது தெரியவில்லை. இப்போது தான் அதற்கான காரணம் தெரிகிறது. அதன் பிறகு கடந்த ஆண்டு இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இரண்டு ஆண்டுகள் அவரின் வாழ்க்கையே மொத்தமாக மாறிவிட்டதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும் என அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











