வணங்கான் படத்தால் கடனில் மாட்டிக்கொண்ட பாலா.. சூர்யா நிச்சயம் வருத்தப்படுவார்.. அந்தணன் பேச்சு!

சென்னை : பாலா இயக்கத்தில் அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் படம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை பார்த்த ஏமாற்றத்தோடு வணங்கான் படம் பார்க்க வந்தவர்களை பாலா ஏமாற்றவில்லை. மேலும், பாலாவின் திரைக்கதையை நம்பி வந்தவர்களுக்கு நல்ல ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் பாலா. படத்தின் முதல் பாதியில், தேவையில்லாத சில காட்சிகள் வருகிறது. அந்த காட்சிகளை குறைத்து இருந்தால், படம் இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும். ஆனால், இரண்டரை மணி நேரம், படம் வர வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகளை எல்லாம் படத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது.

vanangaan bala anthanan

நல்ல படம்: வணங்கான் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் நல்ல படத்தை பாலா கொடுத்து விட்டார் என்கின்ற எண்ணத்தோடு தான் வெளியே வருகிறார்கள். ஒரு படத்தினுடைய வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணம் அந்த எண்ணத்தை, படம் பார்த்தவர்கள் மத்தியில் பாலா ஏற்படுத்திவிட்டார். அருண் விஜய்யின் தோற்றத்தை பார்க்கும் போது, இது பிதாமகன் படமா என்று நினைக்க தோன்றலாம். ஆனால், வணங்கான் படம் வேறு, பிதாமகன் படம் வேறு. வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்தது, அவர் வாழ்நாளில் பெருமைப்பட வேண்டிய விஷயமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சூர்யா தவறிவிட்டுவிட்டார்: இந்த படத்தை சூர்யா பார்த்தால் நிச்சயமாக இப்படி ஒரு படத்தை தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தப்பட்டு இருப்பார். ஆனால் சூர்யா, இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படத்தின் ஓபனிங் வேறு விதமாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்திற்கு ஓப்பனிங் சற்று குறைவாக தான் இருந்தது. அதன் பிறகு படத்திற்கு வந்த நல்ல விமர்சனத்தால், படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிச்சயம் வணங்கான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும்.

பாலாவை பார்த்து பயந்தனர்: இந்த படத்தில் பாலா மொத்தமாக மாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம், விடிய விடிய படத்தை எடுத்துவிட்டு இது தேவையில்லாத காட்சி என்று தூக்கிப் போட்டு விடுவார். இதனால் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க மிகவும் பயந்தனர். ஆனால், வணங்கான் படத்தில் பாலா நாளைக்கு என்ன காட்சி எடுக்க வேண்டும் என்பதை, பக்காவாக திட்டம் போட்டு முன்தினமே கொடுத்து இருக்கிறார். ஒரு புது இயக்குனர் தயாரிப்பாளருக்கு எப்படி பயப்படுவாரோ அதே போன்று வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார் பாலா.

மாறி இருக்கிறார்: அதற்கு காரணம் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதுமே, தன்னை மாறிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பாலா வணங்கான் திரைப்படத்தில் ஒட்டுமொத்தமாக மாறி இருக்கிறார். பாலா இதே போன்று இருந்தால் இன்னும் நல்ல பல வெற்றிப்படத்தை கொடுப்பார். இதுமட்டுமில்லாமல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவருக்கு பல விஷயத்தை கற்றுக்கொடுத்துவிட்டது.

கடனில் பாலா: வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதற்கு முன், பாலா மதுரை அன்புவிடம், கடன் வாங்கி இருந்தார். அந்த கடனையும் கொடுக்க முடியாத சூழலில் பாலா மாட்டிக்கொண்டார். மேலும், வணங்கான் திரைப்படமும் விற்பனையாகவில்லை, கடைசி நேரத்தில் மூன்று கோடி பேங்கில் போடப்பட்டு, இதன் பின் ஆன்லைனில் பணத்தை கட்டிய பிறகு தான், பாலா என்ஓசி கொடுத்தார். இதனால், ஏற்பட்ட தாமதம் காரணமாக தான் வணங்கான் படம் நேற்று வெளியாக தாமதம் ஆனது என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X