Valaipechu Anthanan: ஜோதிகாவின் உடை குறித்த விமர்சனம்.. முட்டாள்தனமானது என அந்தணன் கமெண்ட்!
சென்னை: நடிகை ஜோதிகா பாலிவுட்டில் தான் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். ஆனாலும் அங்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கி ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறி முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா தன்னுடைய கணவர், குடும்பம், குழந்தைகள் என சினிமாவிலிருந்து ஒதுங்கியே காணப்பட்டார். தொடர்ந்து 36 வயதினிலே படம் மூலம் தன்னுடைய ரீ-என்ட்ரியை கொடுத்திருந்த ஜோதிகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா பாலிவுட்டியில் தான் தன்னுடைய திரை பயணத்தை முதலில் தொடங்கினார். ஆனால் அவருக்கு அங்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாத சூழலில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய நாயகியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஜோதிகா. ஒரு கட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் சில காலங்கள் ஒதுங்கி இருந்தார்.
ஜோதிகா ரீ-என்ட்ரி: குழந்தைகள் வளர்ந்த நிலையில் 36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து நாச்சியார் உள்ளிட்ட பல தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் ஜோதிகா. சமீபத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவனுடன் இணைந்து ஜோதிகா நடித்த ஷைத்தான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலில் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டாகி வரும் ஜோதிகா மும்பையிலேயே சூர்யாவுடன் செட்டில் ஆகிவிட்டார்.
சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜோதிகா உடை: பாலிவுட்டில் அடுத்தடுத்த விழாக்களில் ஜோதிகா, சூர்யாவை பார்க்க முடிகிறது. சமீபத்தில் பிலிம்பேர் விழாவில் பங்கேற்ற ஜோதிகாவின் உடை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமிக்க சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து ஜோதிகா இப்படி ஒரு உடையுடன் பொதுவெளியில் தோன்றியது அனைத்து தரப்பினரையும் விமர்சனங்களை வைக்க செய்துள்ளது. இந்நிலையில் ஜோதிகா கண்ணியமான வகையிலேயே உடையணிந்திருந்ததாகவும் அவரது உடை குறித்து பேசுவது முட்டாள் தனம் என்று வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் பேசியுள்ளார்.
அந்தணன் கமெண்ட்: அவரது உடையை ஊடுருவி பார்த்துவிட்டு சிலர் விமர்சனம் செய்வதாகவும் அந்தணன் கூறியுள்ளார். பாலிவுட்டில் ஏறக்குறைய அனைவருமே அரைகுறை ஆடையுடனேயே இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்றும் அவர்களுடன் ஒப்பிடும்போது ஜோதிகா 99 சதவிகிதம் சிறப்பாகவே ஆடையணிந்து வந்ததாகவும் இந்த விமர்சனம் மிகவும் தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











