விஜய்யோட ஸ்டேட்மெண்ட் பலருக்கு எரிச்சலைதான் கொடுத்திருக்கு.. வலைபேச்சு அந்தணன் ஓபன்!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பதாக படத்தில் காணப்படும் காட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனுக்கு குறியீடாக கொடுக்கும் விஜய், இனிமேல் அவரை பார்த்துக் கொள்ளும்படி கூறுகிறார். இந்த காட்சிகள் குறித்து பேசியுள்ள வலைப்பேச்சு அந்தணன், இந்த விஷயத்தில் விஜய் இப்படி பேசியுள்ளது பலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கோட் படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் கோட் படம் வெளியான நிலையில், தற்போது சில கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பல படங்களில் இருந்து ரெஃபரன்ஸ் எடுத்து அதை இந்த படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோட் படத்தில் பல சுவாரசியங்களை இணைத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் இவற்றிற்காக செலவிட்ட நேரத்தை சிறப்பான திரைக்கதைக்காக அவர் செலவிட்டு இருந்தால் படம் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஜய் ஸ்டேட்மெண்ட்: மேலும் கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா தான் மிகப்பெரிய வில்லன் என்றும் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டி உள்ளார். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் என எதுவுமே கவனத்தை பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் ரசிகர்களை கவரும்வகையில் சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கேரக்டர் வரும் காட்சிகளில் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் அடுத்தடுத்த வில்லன்களை பதம் பார்க்க கிளம்பிய நிலையில் சிவகார்த்திகேயனிடம் அவர் துப்பாக்கியை கொடுத்துவிட்டு இனிமேல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாக அமைந்துள்ளது.
வலைப்பேச்சு அந்தணன் பேச்சு: இதையடுத்து சிவகார்த்திகேயனும் விஜய்யை பார்த்து நீங்கள் எங்கோ அவசரமாக போவதாக தெரிகிறது, நான் இவர்களை பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறுவதாக காட்சிகள் அமைந்துள்ளது. விஜய் அரசியலை பார்க்க கிளம்புவதால் அந்த இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்து விளையாட்டு காண்பித்துள்ளார் வெங்கட் பிரபு. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை இயக்க உள்ள நிலையில் இது போன்ற காட்சிகளை அவர் கோட் படத்தில் அமைத்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
அந்தணன் ஆச்சர்யம்: விஜய் தற்போதுள்ள தளபதியாக தன்னுடைய இடத்தை பிடிக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கரடு முரடான பாதைகளில் பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இடத்தை பார்த்துக் கொள்ளுமாறு சிவகார்த்திகேயனிடம் கூறுவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு டயலாக்கை இணைக்க சிவகார்த்திகேயன் கேட்டிருக்கலாம், வெங்கட் பிரபுவும் இணைத்திருக்கலாம். ஆனால் விஜய் இந்த டயலாக்கை பேச எப்படி ஒப்புக் கொண்டார் என்று அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் இடத்தை பிடிக்க பல நடிகர்களும் விருப்பத்துடன் செயல்பட்டுவரும் நிலையில், படத்தில் அவர் இப்படி பேசியுள்ளது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











