தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் கொடுத்தது பிம்பிலிக்கி பிலாபியா.. வலைப்பேச்சு அந்தணன் ஷேரிங்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக தலைவராக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ் மொழி தெரியாமல் கையில் சிறிதும் காசு இல்லாமல் தமிழகத்திற்கு ரயில் எறியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வேட்டையின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
ஆனால் தன்னை தமிழ் ரசிகர்கள் ஏமாற்றவில்லை என்றும் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் உற்சாகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் ஒரு கோடி ரூபாயும் நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறு தொகையும் கொடுக்காதது குறித்து தற்போது வலைப்பேச்சு அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய ராஜ்ஜியத்தை தொடர்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டார், தலைவர் என அடுத்தடுத்த பட்ட பெயர்களால் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து மிகப்பெரிய மாஸ் காட்டியவர் ரஜினிகாந்த். தமிழில் தற்போது அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
வேட்டையன் படம்: வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. இன்னும் படத்தில் அடுத்தடுத்த பாடல்களின் லிரிக் வீடியோக்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் இசை வெளியிடும் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
வலைப்பேச்சு அந்தணன் கேள்வி: முன்னதாக தன்னுடைய பாடல் ஒன்றில் தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்று பாடியிருந்தார் ரஜினிகாந்த். தமிழ் ரசிகர்களுக்கும் தமிழகத்திற்கும் தான் எப்போதுமே மிகவும் கடமைப்பட்டவன் என்று அவர் அடுத்தடுத்து கூறி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ள வேட்டையன் பட இசை வெளியீட்டிலும் தான் தமிழ் மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் சென்னைக்கு வந்ததாகவும் தன்னை தமிழ் ரசிகர்கள் ஏமாற்றவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த், நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு சிறு தொகையும் கொடுக்காதது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினியின் நடவடிக்கை: நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, உதயநிதி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து நடிகர்கள் நடிகர் சங்க கட்டடத்திற்காக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய பங்கிற்கு 50 லட்சம் ரூபாய் அளித்திருந்தார். இந்நிலையில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய பங்கிற்கு 5 கோடி ரூபாயாவது கொடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நடந்திருக்கலாம் என்றும் அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எப்போதும் தமிழகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது குறித்து அவ்வப்போது விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











