இர்ஃபான் செய்வது எல்லாம் ரொம்ப அநியாயம்.. திமிரில் செய்யும் வேலை.. கொந்தளித்த பிரபலம்!
சென்னை: யூடியூபில் 30 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை வைத்து இருக்கும் இர்ஃபான் தமிழ் நாட்டின் டாப் யூடியூபர்களில் ஒருவராக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில், இதுகுறித்து
நல்ல சுவையான உணவு எங்கே கிடைக்கும் என தேடி தேடி ருசித்து ருசித்து சாப்பிட்டு அதை தனது சேனலில் பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்ஃபான் . இவர் கடந்த ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த ஆசிபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஃபுட் ரிவ்யூ கொடுத்து வந்த இர்ஃபான் , தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதை அந்த விழாவில் அறிவித்து இருந்தார்.

இர்ஃபான் : இந்தியாவில் சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை உன்கூட்டியே தெரிந்து கொள்வது குற்றம் என்பதால் துபாய்க்கு சென்று இந்த வேலையை செய்திருந்தார் இர்ஃபான் . அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டார்.
பிரசவ வீடியோ: அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனநிலையில், மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், அறுவை சிகிச்சை அறையில் இருந்த இர்ஃபான் , மனைவியின் தொப்புள் கொடியை வெட்டி உள்ளார். இதுதான் இர்ஃபான் சர்ச்சையில் சிக்க காரணமாக அமைந்துள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிர் தான் காரணம்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தனன், யூடியூபில் இர்ஃபான் என்ன செய்தாலும் பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கிறது. அப்படி இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பான ஒரு வேலையை அவர் ஏன் செய்ய வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிப்பது குற்றம். ஆறில் மாதத்தில் இருந்து ஓராண்டு தண்டனை என்று இருக்கும் போது, இர்ஃபான் இந்த வேலையை செய்தது, எனக்கு பின்னாடி பெரிய ஆட்கள் இருக்கிறார்கள், என்னை எதுவும் செய்ய முடியாது என்கிற திமிர் தான்.
தண்டனை பலமாக இல்லை: இர்ஃபான் செய்த விஷயத்தில் குறைந்தபட்சம் ஏதாவது தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் அப்போது தான் அடுத்த முறை எந்த வீடியோ வெளியிட்டாலும் யோசித்து செய்வார். அதை செய்யாதது தான் வருத்தம் அளிக்கிறது. ஆனால், இந்த வீடியோவை போட்டுத்தான் சம்பாதிக்க வேண்டுமா, எல்லாத்திற்கும் ஒரு அளவு இருக்கில்ல, தண்டனை பலமாக இல்லாததால் தான் இர்ஃபான் தொடர்ந்து இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











