தக் லைஃப் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி.. சிம்பு தான் காரணமா? இருவருக்கும் என்ன பிரச்சனை?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, படத்தில் இருந்து திடீரென விலகியதற்கு சிம்பு இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியதுதான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்படி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம், கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் இயக்க உள்ளார். நாயகன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இந்த கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கை கோர்த்துள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். தக் லைஃப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. அப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

valaipechu Anthanan said that Simbu was the reason for Jayam Ravi s exit from Thug Life

தக் லைஃப் படப்பிடிப்பு தள்ளிவைப்பு: இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டிமிருந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல் படுபிஸியாக இருப்பதால், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல மாதத்திற்கு முன்பே இப்படத்தில் ஒப்பந்தமான துல்கர் சல்மான், படப்பிடிப்பு தள்ளிப்போனதால், இப்படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு அந்த படத்தில் கமிட்டானார் என்கிற தகவல் கடந்த வாரம் வெளியானது. சிம்பு இந்த படத்தில் கமிட்டானதும் ஜெயம் ரவி இந்த படத்திலிருந்து வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார். அதற்கு காரணம், கால் ஷீட் இல்லை என்று கூறினார். ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு தான் காரணம்: இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், தக் லைப் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேறியதற்கு முக்கிய காரணம் சிம்பு தான் என்றும், அவர் இந்த படத்தில் கமிட் ஆவார் என்று ஜெயம் ரவி எதிர்பார்க்கவில்லை. அவர் படத்திற்குள் வந்ததால், இவர் வெளியேறி விட்டார். இவர்கள் இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கக்கூடாது என்பதில் ஜெயம் ரவி உறுதியோடு இருக்கிறார் என்றார்.

அருண் விஜய் நடிக்க வாய்ப்பு இல்ல: ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் தக் லைஃப் படத்தில் இணைந்து இருப்பதாக வெளியாகி வரும் செய்தியில் துளியும் உண்மை இல்லை, அவர் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, மான் கராத்தே இயக்குநரின் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அது மட்டுமில்லாமல், வணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் சம்பளத்தை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், நான்கு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் இவர் நடிக்க வாய்ப்பு இல்லை. அதுவும் இல்லாமல் மணிரத்னம் நிறைய சம்பளம் எல்லாம் தரமாட்டார். மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்தணன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X