Lal Salaam: லால் சலாம் ரஜினிக்கே புடிக்கல.. அந்தணன் சொன்ன அதிர்ச்சி தகவல்.. படம் ஓடுமா?
சென்னை: தனுஷை வைத்து '3' படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் பின்னர் கௌதம் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய வை ராஜா வை படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் கணவர் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டு படங்களும் பெரிதாக ஓடாத நிலையில், அதன் பின்னர் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென கணவர் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். ரசிகர்கள் மட்டுமின்றி அப்பா ரஜினிகாந்த்தும் தனது மகள் கணவரை பிரிந்து விட்டார் என்பதால் மனவேதனை அடைந்தார்.

மீண்டும் இயக்கம்: தனுசை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்த நிலையில் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி இருந்தார். அதன் பின்னர், லைகா தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் என பெரிய ஸ்டார் காஸ்ட்டை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். பிப்ரவரி 9ம் தேதி (நாளை) அந்த படம் வெளியாகிறது.
பாஸ் மார்க் வாங்கிய டிரைலர்: சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. ஆனால் அந்த விழாவில் டிரைலர் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு நேரத்தில் ஒரு வழியாக ட்ரெய்லரை வெளியிட்டனர். விஷ்ணு விஷாலின் நடிப்பு, செந்தில் உருக்கமாக பேசும் இடங்கள், தன்யா பாலகிருஷ்ணாவின் டயலாக், விக்ராந்தின் மெச்சூரிட்டியான நடிப்பு மற்றும் ரஜினிகாந்தின் அதிரடி என்ட்ரி என டிரைலர் முழுக்கவே பட்டாசாக இருந்தது.

ரஜினிக்கு பிடிக்கவில்லை: சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அந்தணன் லால் சலாம் படத்தை முதலில் பார்த்துவிட்டு ரஜினிக்கு பெரிதாக பிடிக்கவில்லை என்றும் சில மாற்றங்களை தனது மகளிடம் செய்யச் சொன்னதாகவும் அதன் பின்னர் சில பேட்ச் வொர்க்குகளை ஐஸ்வர்யா செய்ததாக அந்தணன் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
ரொம்ப பழசா இருக்கு: ஊரில் தேர் திருவிழா, கிரிக்கெட்டில் மதக் கலவரம், காஸ்ட்யூம் மற்றும் தோற்றம் எனக்கு எதுவுமே புதிதாக இல்லை என்று ரொம்ப பழசாக உள்ளது என லால் சலாம் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தனது விமர்சனத்தை அடுக்கி இருக்கிறார் அந்தணன். நாளை வெளியாக உள்ள லால் சலாம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இரவுக்கு வெற்றி பெறும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். ஏற்கனவே சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டை வைத்து பா ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகியிருந்தது. படம் ரீதியாக அந்த படத்தை வீழ்த்துமா என்கிற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது


Click it and Unblock the Notifications











