சூர்யா கதையை ஒழுங்கா கேளுங்க.. மிஷ்கினின் பேச்சு எரிச்சலா இருக்கு.. கடுப்பான பிரபலம்!

சென்னை: நடிகர் சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இதுபற்றி பேசிய வலைப்பேச்சு அந்தணன், அவரை நாம் ஏன், பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், மிஷ்கினின் பேச்சு எரிச்சலாக இருக்கு என்று பேசி உள்ளார்.

சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அலங்கு. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய, இயக்குநர் மிஷ்கின், அண்மையில் ஒரு பெரிய படம் வெளியானது. அந்தப் படத்தை பலர் கடுமையாக விமர்சித்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கோபமடைகிறார்கள். அது அவர்களின் உரிமைதான். ஆனால் படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும்.

mysskin suriya anthanan

பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்: சூர்யாவின் கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தைப் பற்றி மோசமான விமர்சனங்கள் வருகிறது. நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை என இயக்குநர் மிஷ்கின் அந்த விழாவில் பேசி தெரிவித்துள்ளார்.

அந்தணன் பேச்சு: இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், சூர்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு அவரது குடும்பம் இருக்கிறது, மனைவி இருக்கிறார். அவர்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள், நாம் எதற்கு பத்திரமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். சூர்யாவை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமில்லை, அவரை அவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்கு சூர்யா நல்ல கதைகளை கேட்டு, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தாலே போதும்.

மிஷ்கின் மீது வெறுப்பு: கங்குவா படத்தின் தோல்விக்கு சூர்யா தான் காரணம் என்பது போல இணையத்தில் பரவிய பலவிதமான கருத்துக்கள் மிஷ்கினுக்கு பிடிக்காததால். மேடையில் சூர்யாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார். இதை சுற்றி வளைத்து பேசாமல், படத்தை படமாக பாருங்கள், அது படம் மட்டும் தான் என்று சொல்லுவதைவிட்டுவிட்டு மிஸ்கின் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார். தன் மீது அனைவரின் கவனமும் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் அப்படி பேசவில்லை, அவரும் ஒரு சிறந்த இயக்குநர் தான், பல நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது, அனைவரிடத்திலும் கவனம் பெற வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாகவே மிஷ்கினின் பேச்சை கேட்கும் போது, அவர் மீது ஒரு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த பழக்கத்தை மிஸ்கின் அவர்களும் மாற்றிக் கொள்ளப்போவதும் இல்லை. அவர் மீது நமக்கு இருக்கும் வெறுப்பும் மாறப்போவது இல்லை என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X