தனுஷ் எப்படி இருக்கிறார்.. இட்லி கடை படப்பிடிப்பில் நடந்தது என்ன.. அந்தணன் சொன்ன தகவல்!
சென்னை: தனுஷின் 52வது படமான இட்லி கடை படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனுஷ் தற்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த வாரம் தனுஷின் உடல்நிலை சரியில்லாததால் இட்லி கடை படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்து விட்டார் என்று வீடியோவில் பேசி கூறியிருந்தேன். ஆனால் அந்த செய்தி இணையத்தில் பலவிதமாக பரவி, கடைசியில் தனுஷ் படுத்த படுக்கையாகிவிட்டார் என்பது போன்ற வதந்திகள் பரவி வருகின்றன. உண்மையில் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று தெரிந்தால், தனுஷின் ரசிகர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்பதால் இதை நான் இப்போது கூறுகிறேன்.

படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை: இட்லி கடை படப்பிடிப்பில், ஒரு வீட்டை கொளுத்தும் காட்சியில் தனுஷ் உள்ளே சென்று அங்கு இருப்பவர்களை காப்பாற்றுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் ஒரே புகையாக இருந்ததால், டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம், புகை அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், தனுஷ் அதை ஏற்றுக்கொள்ளாமல், அந்த காட்சியில், நான் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பிடிவாதமாக நடித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு டஸ்ட் அலர்ஜி இருப்பதால், இந்த புகையும் சேர்ந்து கொண்டு அவருக்கு பிரச்சனை கொடுத்துள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னையில் இரண்டு நாள் ஓய்வு எடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.
தனுஷ் எப்படி இருக்கிறார்: தற்போது அவர் வெளிநாட்டில் ஜாலியாக ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு திரும்பி வந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வது தான் அவர்களுக்கு திட்டம். ஆனால், தனுஷ் சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு சென்று விட்டதால், அவர் படுத்த படுக்கையாகி ஆகிவிட்டார் என்று செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. தனுஷ் நன்றாக இருக்கிறார் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அந்த வீடியோவில் அந்தணன் தெளிவாக கூறியுள்ளார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: புத்தாண்டை முன்னிட்டு தனுஷூன் இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் வேட்டி சட்டையில் நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு, ஒரு கையில் தூக்குடனும், மறு கையில் காய்கறி பையை வைத்து இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











