நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. வாய் திறக்காமல் இருக்கும் தனுஷ்.. அந்தணன் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ "Nayanthara: Beyond the Fairytale" என்ற பெயரில் ஆவணப்படமாக நேற்று வெளியானது. இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் சிறுகாட்சி இடம் பெற்று இருந்தன.

அந்த சின்ன 3 நிமிட வீடியோவிற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு, பழிவாங்குவதாக நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார். இது சினிமா உலகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில்,இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.

nayanthara dhanush anthanan

Trend Talks Plus யூடியூபில் அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாராவின் ஆவணப்படம் சர்ச்சையை கிளப்பிய அளவுக்கு அந்த வீடியோல பெருசா எதுவுமே இல்லை. நானும் ரவுடிதான் படத்துல நடித்துக் கொண்டிருக்கும், போது எந்த காட்சி எடுக்கும் போது விக்னேஷ் சிவன் மேல காதல் வந்தது என்பதை சொல்லி இருக்கிறார்கள். அதுவும் புதுசா எதுமே இல்ல அதேபோல திருமண வீடியோ எதுவும் அதில் இடம் பெறவில்லை. அந்த வீடியோவில் புதுசாக இருந்தது நயன்தாராவோட குடும்பம் தான் இந்த குடும்பத்தில் இருக்கிற அனைவரும் இந்த வீடியோல இருக்காங்க. மற்றபடி நயன்தாராவை பற்றி பலரும் பலவிதமா புகழ்ந்து பேசி இருக்காங்க. கிட்டத்தட்ட அது தற்புகழ்ச்சிக்கான ஒரு வீடியோவாகத்தான் இருந்தது.

கடிதத்தை எழுதியதே விக்னேஷ் சிவன் தான்: தொடர்ந்து பேசிய அவர், தனுஷ் மட்டும் இல்லையென்றால் விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரே யாருக்கும் தெரிந்திருக்க மாட்டார். விக்னேஷ் சிவனுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து, அவரை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்ததே தனுஷ். ஆனால் தனுஷை எதிர்த்தே தன்னுடைய மனசாட்சியை ஒளித்து வைத்துவிட்டு தான் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்காக இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். நயன்தாராவால், இப்படி ஒரு கடிதத்தை எழுதி இருக்க முடியாது இந்த கடிதத்தை எழுதிக் கொடுத்ததே விக்னேஷ் சிவன் தான். ஆனால் சினிமாவை பொருத்தவரைக்கும் நன்றி என்பதே கிடையாது. இதில், நன்றியை கொன்றவர்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் ஒன்றும் அதற்கு விதி விலக்கு அல்ல.

கோபத்தில் தனுஷ்: தனுஷூம் நயன்தாராவும் ஒரு காலகட்டத்தில், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள், பாய் பெஸ்டீ என்று சொல்லக்கூடிய அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் தானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு, அதாவது விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்த பிறகு அந்த நட்பு போய்விட்டது. இந்த கோபத்தில் தான் தனுஷ், ராதிகாவிடம் சூடுசொரணை இல்லையா என்று கேட்டு இருக்கிறார். இதை எப்படி, ராதிகா வெளியில் சொன்னார் என்று தெரிவில்லை.

தனுஷ் வாய் திறக்கவே இல்லை: ராதிகா மட்டுமல்லாமல் தனுஷூடன் நடித்த பல நடிகைகளும் நயன்தாராவின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து லைக்குகளை போட்டு இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது, இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கிறதா, இல்லை அவர் மீது மீடூ புகார் கொடுக்கக் கூடியதற்கு கூட வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனின் தொடக்கமாக கூட இது இருக்கலாம். இப்படி ஒரு பக்கம் பிரச்சினை நடந்து கொண்டு இருந்தாலும் தனுஷ் தன்னுடைய திரைப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் தனது வேலைகளை செய்து கொண்டு வருகிறார்.

நயன்தாரா பிரச்சனை வந்த போது கூட அது பற்றி எந்த கருத்தையும் தனுஷ் இதுவரை தெரிவிக்கவில்லை. தேனியில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சினிமா மீது காதலுடன் இருக்கும் ஒருவரை இந்த சின்ன கிசுகிசு எல்லாம் எதுவும் செய்துவிட முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X