ஷங்கருக்கே எண்டு கார்டா? இந்தியன் 2 நெகட்டிவ் விமர்சனத்திற்கு காரணம் படமா? பின்னால் இருக்கும் சதியா!
சென்னை: பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. சுமாரான விமர்சனங்கள் தான் படத்திற்கு கிடைத்து வருகிறது என்பதால் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியன் 2 படத்திற்கு வரும் மோசமான விமர்சனம் ஷங்கரை படு பாதாளத்தில் தள்ளி உள்ளது. தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஷங்கரின் இமேஜ் ஒரே நாளில் அதளபாதாளத்திற்கு வந்ததற்கு காரணம் படம் தானா.. படத்திற்கு பின்னால் இருக்கும் சதியா? ஆனால், இந்தியன் 2 படம் சதிக்கு இடம் கொடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், எந்த காரணத்தையும் சொல்லி படத்தை அடக்கிவிட முடியாது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

பாய்ஸ் படுதோல்வி: ஜென்டில் மேன் படத்தில் ஆரம்பித்து முதல்வன், அன்னியன் வரை அனைத்து படத்தையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், பாய்ஸ் படத்திற்கு இதே போல நெகட்டிவ் விமர்சனம் வந்தது. விமர்சகர்களும், பத்திரிக்கையாளர்களும் அந்த படத்தை படுமோசமாக விமர்சனம் செய்து ரசிகர்களை தியேட்டர் பக்கமே வரவிடாத வகையில் அதன் விமர்சனம் இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கூட பாய்ஸ் படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
ஷங்கரின் கனவு என்னவாகும்: வேல்பாரி என்ற ஒரு அருமையான கதையை படம் எடுப்பதற்கு ஷங்கர் முயற்சி எடுத்து இருக்கிறார். இந்த படத்திற்காக ஒரு பெரிய நிறுவனம் ஷங்கரை நம்பி பணத்தை போட தயாராக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியன் 2 படத்திற்கு வரும் மோசமான விமர்சனத்தால் இந்தியன் 3 படத்தின் ஓப்பனிங் எப்படி இருக்கும், இந்தியன் 3 படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வருவார்களா... தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்குவார்களா... ரசிகர்கள் வருவார்களா என பல கேள்விகளை தாங்கிக் கொண்டு இந்தியன் 3 தயாராக இருக்கிறது. ஒரு பக்கம் ராம்சரணின் கேம் சேஞ்சர், இந்தியன்3 இந்த இரண்டு படங்களும் கை கொடுக்கவில்லை என்றால், ஷங்கரின் ஆயிரம் கோடி கனவான வேல்பாரி என்ன ஆகும் என்று தெரியவில்லை.

குப்பை படம் இல்லை: இந்தியன் 2 படத்திற்கு வரும் விமர்சனம் என்ன வென்றால், படத்தோடு கனெக்டாக முடியவில்லை. தமிழ் நாட்டின் நடக்கும் அவலத்தை சுட்டிக்காட்டவில்லை. அதே போல நாட்டில் நடக்கும் ஊழல், அநியாயம் போன்றவற்றுக்கு அரசியல்வாதிகளும் காரணமாக இருக்கும் போது, தொழிலதிபர்களை பழிவாங்குவது சரியானதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்தை எடிட்டிங் செய்து மீண்டும் வெளியிட்டால் படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு, ஒரே அடியாக இந்த படத்தை குப்பை படம் என்று தூக்கி எறிய முடியாது.
ஷங்கரின் ஈகோ: இந்த படத்தை இன்றைய 2கே கிட்ஸ்கள் ட்ரோல் செய்ய முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியவில்லை, டிக்கெட்டை ஆன்லைனில் கூடுதல் கட்டணத்திற்கு புக் செய்து, ஆப்பில் ஆர்டர் போட்டு ஹாயாக வீட்டில் இருந்து சாப்பிடுபவர்களிடம், ஒவ்வொரு காசும் முக்கியம் என்று சொல்லி ஒரு படம் எடுத்தால் அவன் கிரிஞ்ச், பூமர் என்று தான் சொல்லுவான். இதனால், இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றி, படத்தை இரண்டரை மணிநேரமாக ஆக்க வேண்டும். ஆனால், அதற்கு ஷங்கரின் ஈகோ இடம் கொடுக்குமா என்பது தான் கேள்வி என்று அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











