நயன்தாராவால் நிச்சயம் பூகம்பம் வெடிக்கும்..என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை மூன்று குரங்குகள் என்று விமர்சித்து பேசி இருந்தார். இந்த வன்மமான பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், நீ மனுசனே இல்லை என்கிற அளவிற்கு மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் நயன்தாரா அவ்வளவு நல்லவரா? அவரால், மிகப்பெரிய பூகம்பம் நிச்சயம் வெடிக்கும் என்று பேசி இருக்கிறார்.

தன்னுடைய திருமணத்தையே வியாபாரமாக்கிய ஒரு நடிகை தான் நயன்தாரா. வழக்கமாக ஒரு திருமணம் நடக்கும், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி விட்டு செல்வார்கள்.அதை ஒரு ஆல்பமாகவோ, வீடியோவாகவோ எடுத்து வைத்துக்கொண்டு நாம் நம்முடைய குழந்தைகளின் வருங்காலத்தில் இதை காட்டுவதற்காக நினைவுக்காக வைத்திருப்போம். ஆனால் தன்னுடைய கல்யாணத்தையே 18 கோடிக்கு விற்று அதையே பணமாக மாற்றுகிற சாதுரியம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கே உண்டு.

nayanthara vignesh shivan anthanan

நயன்தாரா நல்லவரா: மற்றவர்களை எவ்வளவு விமர்சனம் செய்ய முடியுமோ செய்துவிட்டு, நீ மனுசனே இல்லை என்கிற அளவிற்கு விமர்சனம் செய்யும் நயன்தாரா அவ்வளவு நல்லவரா? மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு முன் நயன்தாரா நியாயமானவராக இருக்க வேண்டும். ஆனால், அவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், மற்றவர்களிடம் நீங்கள் எவ்வளவு அன்பு பாராட்டி இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சினிமா உலகச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும்.

டார்ச்சர் செய்த நயன்தாரா: நயன்தாரா நடித்த ஓ2 என்கிற படத்தின் கதை என்னவென்றால், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அந்த பேருந்து அப்படியே மண்ணுக்குள் புதைந்து விடும், அதிலிருந்த அனைவரும் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பதுதான் அந்த படத்தில் கதை. ஆனால் பேருந்து மண்ணுக்குள் புதைந்த காட்சியில் கூட நயன்தாரா மட்டும் பளிச்சென்று இருந்தார். இயக்குனர் பலமுறை மேக்கப்பை டல் செய்து கொள்ளும்படி கேட்ட போதும் அதற்கு நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை. அந்தப் படத்தை இயக்குநர் கடைசி வரை தான் நினைத்தது போல எடுக்கவே முடியவில்லை.

வன்மத்தை கக்கும் நயன்: ஒரு படத்தின் இயக்குநர் தான் இயக்கும் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார். ஒரு படைப்பாளிக்கு அந்த சுதந்திரத்தைக் கூட அவர் கொடுக்கவில்லை. ஒரு இயக்குனருக்கு என்னென்ன டார்ச்சர் கொடுக்க முடியுமோ அனைத்தையும் அந்த படத்தின் இயக்குநருக்கு நயன்தாரா கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் நடிக்கும் படத்தில் எந்த படத்திற்குமே அவர் பிரமோஷனுக்கு வந்ததே இல்லை. இப்படி பலரின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொண்ட நயன்தாரா, மற்றவர்கள் மீது வன்மத்தை கக்குவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எங்களுடைய கேள்வி.

nayanthara vignesh shivan anthanan

மிகப்பெரிய பூகம்பம்: மற்றவர்களின் மீது வன்மத்தை கக்கி இருக்கும் நயன்தாரா, நாளைக்கு இதை ஒரு பெரிய சம்பவமாக பேசுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இது நாளைக்கு என்னவாக மாறும் என்பது யாருக்குமே தெரியாது. வேகமாக ஒரு வலை வீசப்பட்டு வருகிறது. நிச்சயமாக அதிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையை அவர் உருவாக்கி வருகிறார். ஆனால், நிச்சயமாக நயன்தாராவால் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஒன்று விரைவில் வரும் என்று அந்த பேட்டியில் அந்தணன் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X