ரஜினியால் நின்று போன துருவ நட்சத்திரம்.. கடனில் இருந்து மீள்வாரா லிங்குசாமி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: பையா, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்றைக்கு லிங்குசாமியை கை தூக்கிவிடுகிற இடத்தில் கமலும்,கார்த்தியும் இருக்கிறார்கள். ஆனால், அதை செய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், அண்மையில் பையா படம் வெளியான போது அதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. லிங்குசாமியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள், இதனால் அவருக்கு பையா 2 படத்தை இயக்கிவிடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், இப்போது லிங்குசாமி மிகுந்த பண கஷ்டத்தில் இருக்கிறார்கள் அதற்கு காரணம் இவர் தயாரித்த திரைப்படங்கள் தான். எந்த ஒரு இயக்குநர் தயாரிப்பாளராக மாறிவிட்டாரோ அப்போதே பிரச்சனை தான். அவர் கமலை வைத்து உத்தமவில்லன் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் திருப்பதி பிரதர்ஸ் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

valaipechu anthanan talks about paiya movie director Lingusamy

கடனில் லிங்குசாமி: இன்று திரையுலகம் லிங்குசாமியை கைவிட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன், அதற்கு காரணம் கமல் நினைத்தால் அவரின் கஷ்டத்தை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியம். ஏன் என்றால், லிங்குசாமி தலைகுப்புற விழுந்ததற்கு காரணம் கமல் தான். இந்த படத்தை லிங்குசாமி தேர்வு செய்தது வேண்டுமானால் அவரின் தவறாக இருக்கலாம். ஆனால், கதையை சரியாக கொண்டு சென்று இருந்தால், நிச்சயம் இவ்வளவு பெரிய கடன் சுமையில் லிங்குசாமி இருந்து இருக்க மாட்டார்.

தூக்கிவிடவில்லை : இன்றைக்கு லிங்குசாமியை கை தூக்கிவிடுகிற இடத்தில் கமலும்,கார்த்தியும் இருக்கிறார்கள். பையா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து கார்த்திக்கின் சினிமா பயணத்திற்கு வித்திட்டவர் லிங்குசாமி தான். இன்று கடனில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமியை அழைத்து நான் இருக்கிறேன் சார் என்று உதவி செய்யலாமே, ஒரு வேளை இன்றைய டிரெண்டுக்கு ஏற்றால் போல லிங்குசாமி இல்லை என்று கார்த்திக் நினைக்கிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ கீழே விழுந்து கிடக்கும் மனிதனை கை தூக்கி விடுவதற்கு கூட யாருக்கும் மனம் வரவில்லை, கமல், கார்த்திக் இருவரும் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

கைவிட்ட ரஜினி: மேலும் தொடர்ந்து பேசிய வலைப்பேச்சு அந்தனன், அதே போலத்தான் இயக்குநர் கௌதம் மேனனும் கடன் சுமையில் இருக்கிறார். அவர் துருவநட்சத்திர படத்தால் மிகப்பெரிய கடனில் சிக்கி உள்ளார். அந்த படத்தை எப்படியாவது வெளியிடவேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறார். ஆனால், படம் இப்போதைக்கு வெளியாவது போல தெரியவில்லை. துருவநட்சத்திரம் படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்திடம் தான், கௌதம் மேனன் சொல்லி இருக்கிறார். கதையை கேட்டுவிட்டு ஒகே சொன்ன ரஜினி, பின் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டு காலா படத்தில் நடித்துள்ளார். ஒரு வேளை இந்த படத்தில் ரஜினி நடித்து இருந்தால், இந்த படம் எப்போதோ வெளியாகி இருக்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரீ ரிலீஸ்: கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் கார்த்தி, தமன்னா லீட் கேரக்டர்களில் நடித்த திரைப்படம் பையா. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியாகி வசூலிலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் ஏப்ரல் 11ந் தேதி ரீலிஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X