PS 2 : பஜன்லால் சேட்டுகளாய் மாறிய பொன்னியின் செல்வர்கள்..தஞ்சாவூர் போகாதது நியாயமா?

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் படுஜோராக நடந்து வருகிறது.

கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூர் ஆகிய இடங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது.

ப்ரோமோஷனுக்கு வரும் நடிகர்கள் பஜன்லால் சேட் போல வருவதாக வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Valaipechu Anthanan talks about the promotion of ponniyin selvan 2 movie

சோழாஸ் ரிட்டன்ஸ் : பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் குறித்து பேசிய அந்தணன், இப்போது டிரெண்டில் இருப்பது சோழாஸ் ரிட்டன்ஸ் என்ற வார்த்தைதான். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்கள் பெயரை அந்த கதாபாத்திரத்தின் பெயராகவே மாற்றிக்கொண்டு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

பிரமோஷ செலவு : இவர்கள் ப்ரோமோஷனுக்கு செல்லும் இடத்திலும் வந்தியத்தேவனாகவோ, குந்தவையாகவோ இருந்தால் மகிழ்ச்சி, ஆனால், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர்கள் அவர்களாகவே இருப்பது மிகவும் பார்க்கும் போது மிகவும் கொடுமை இருக்கிறது. பல ஊர்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவர்கள் எதற்கு வந்து இருக்கிறோம் என்று தெரியாமல் சாப்பாட்டை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர் பணம் என்பதால், பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிக்கிறார்கள்.

Valaipechu Anthanan talks about the promotion of ponniyin selvan 2 movie

பஜன்லால் சேட் போல : பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஊர் ஊராக சென்ற நடிகர், நடிகைகள் பாரம்பரிய உடையில் செல்லாமல், பஜன்லால் சேட் போல ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றதுதான் மிகப்பெரிய கொடுமை. இந்த படம் தமிழர்களின் படம், சோழர்களின் படம், தமிழர்களின் பெருமை சொல்லும் படம் என்று சொன்னாலும். இப்படத்தில் நடித்தவர்களின் உடை, சம்மந்தமே இல்லாமல் இந்தி படத்தின் ப்ரோமோஷன் போல இருந்தது.

எதிக்ஸ் கூட இல்லை : தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ராம் சரண் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருந்ததால், அந்த விழாவில் செருப்பு இல்லாமல் தான் கலந்து கொண்டார். அவருக்கு என்று தனி எதிக்ஸ் வைத்து இருந்தார், இது எதிக்ஸ் கூட உங்களிடம் இல்லை.

Valaipechu Anthanan talks about the promotion of ponniyin selvan 2 movie

தஞ்சாவூரை புறக்கணிப்பது ஏன் : அதே போல, ஊர் ஊராக ப்ரோமோஷனுக்கு செல்லும் இவர்கள், தஞ்சாவூரை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். உலகம் முழுவதிலும இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலைப்பார்த்து வியந்து வருகின்றனர். இந்த கதையின் மூலாதாரமே தஞ்சாவூர் தான், இந்த கதையை எழுதிய கல்கியே பல முறை தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றதற்காக தனது குறிப்பில் எழுதிஇருக்கிறார்.

இது சரியா : தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு தஞ்சாவூர் கோவிலையே புறக்கணித்து வருகிறீர்கள் இது எந்த வகையில் சரி என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள், தஞ்சைக்கு போக வேண்டும் என்பதற்காகவே நான் இதை தொடர்ந்து பேசி வருகிறேன் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X