விசித்ராவை போலவே இன்னொரு நடிகை.. ஹோட்டலில் நடந்த பயங்கரம்.. அந்தணன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: 90 காலக்கட்டத்தில் கவர்ச்சியிலும், நகைச்சுவையிலும் பிரபல நடிகையாக திகழ்ந்த விசித்ரா தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார்.
சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்த விசித்ரா, தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தணன் பேச்சு: அதில், இந்த பிரச்சனை விசித்ராவிற்கு மட்டுமில்லை சினிமாவில் உள்ள பல நடிகைகளுக்கு நடந்து இருக்கிறது. இதுபோன்ற பல பிரச்சனைகளை மன தைரியத்துடன் எதிர் கொண்டு கடந்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளும் உண்டு, இதை எல்லாம் பார்த்து விட்டு சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகைகளும் உண்டு.
பல நடிகைகளுக்கு இந்த பிரச்சனை: நடிகை விசித்ராவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னும் பல நடிகைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். இதில் அந்த நடிகை யார்... பெயர் எதுவும் நான் சொல்லப்போவதில்லை ஏன் என்றால் அவர் இப்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.
பெரிய நடிகரின் தங்கையாக: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படத்தில் நடித்த அந்த நடிகை கதாநாயகியாக மாற வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பத்திரிக்கையாளர் என்ற முறையில், தெலுங்கில் பெரிய நடிகருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்து இருக்கு என்று கூறி விட்டு, அந்த நடிகை தனது அம்மாவுடன் ஆந்திரா சென்றார்.
ஹோட்டலில் நடந்த பயங்கரம்: அப்போது அந்த பெரிய ஹீரோவை பார்த்துவிட்டு ஓட்டல் ரூமில் இருந்த போது, அந்த நடிகர் இரவு 11மணி அளவில், கதவை தட்டி திடீரென உள்ளே வந்துள்ளார். இதைப்பார்த்து பயந்து போன நடிகையும் அவரின் அம்மாவும், அந்த நடிகரின் காலை பிடித்து கதறி வேண்டாம் சார்.. எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று அழுதுள்ளனர்.
சினிமாவே வேண்டாம்: இதைப்பார்த்து டென்ஷனான அந்த நடிகர், இப்போவே இந்த இடத்தை விட்டு ஓடிடுங்க. காலையில உங்களை நான் பார்க்கக்கூடாது என்று கூறியதை அடுத்து. அந்த நடிகையும் அம்மாவும் நள்ளிரவே அந்த ஓட்டலை காலி செய்துவிட்டு அங்கிருந்து கிளப்பி வந்த அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று சென்றுவிட்டதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











