விஷாலின் EX காதலி.. பணம் இருந்தும் முடியல.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய, விஷால், கை நடுங்கியது, பேசும் போது குரல் தடுமாறியது. இதனால், பத்திரிகையாளர்கள் இடையே சலசலப்பு ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இணையத்தில் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு என கேட்டு வரும் நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து பேசி உள்ளார்.

அதில், விஷால் பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்கும் வரை, அவர் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்தார். அவன் இவன் படத்திற்காக கண் சிகிச்சை ஒன்றை செய்தார். அதுதான் மைக்ரேன் என்ற நோயை உருவாக்கி விட்டது. இதனால், ஒற்றைத் தலைவலியால் கடுமையாக அவதிப்படும் விஷால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஒரு கட்டத்தில் அந்த வலியை மறப்பதற்காக வேறு ஒரு தகாத பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். விஷால், இந்த பழக்கத்தை மட்டும் தவிர்த்து இருந்தார் என்றால் இந்த பெரிய கொடுமையை அவர் சந்தித்து இருக்க மாட்டார்.

vishal health anthanan

6 மாதம் ஆகும்: தற்போது விஷால் இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரும் போது கூட அவர் ட்ரீட்மென்டில் தான் இருந்தார். விஷால் மலேரியா மற்றும் வைரல் ஃபீவரால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்வதெல்லாம் பொய். அவருக்கு தீவிரமான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், அந்த சிகிச்சையில் இருந்து விஷால் எவ்வளவு சீக்கிரம் மீண்டு வருவார் என்று தெரியவில்லை. விஷால் முழுமையாக குணமடைய குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது ஆகும். எவ்வளவு பணம் இருந்தும் என்ன செய்வது.

தனிமை தான் காரணம்: விஷாலின் இந்த நிலைமையை பார்த்து அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இதில், ஒரு மகனுக்கு திருமணமாகி குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். ஆனால், விஷால் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் சொல்லி இருக்க வேண்டும். இல்லை என்றால், கட்டாயப்படுத்தியாவது திருமணம் செய்து வைத்து இருக்க வேண்டும். அவரின் இந்த நிலைமைக்கு தனிமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

முன்னாள் காதலி: விஷால் ஒரு நடிகையுடன் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். அந்த நடிகை மிகவும் கண்டிப்பானவர். அந்த நேரத்தில் விஷால் இது போன்ற தவறான பழக்கத்தை செய்யவே பயந்தார். அதுபோல சந்தர்ப்பம் அமைந்தால் கூட, நடிகையிடம் பர்மிஷன் கேட்டு பார்ட்டி இருக்கிறது என்று சொல்லிவிட்டுத்தான் போவார். அப்படி அந்த நடிகையிடம் அனுமதி இல்லாமல் சென்றுவிட்டால், வீட்டுக்கு வந்ததும் விஷாலை அந்த நடிகை அடிப்பார். அப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலோடு இருந்தனர். அப்படி கண்ட்ரோலில் வைத்திருந்த அந்த காதலும் ஒரு கட்டத்தில் பிரிந்து போனதால் மிகப்பெரிய மன உளைச்சல், பிரச்சனை என அனைத்திலும் சிக்கி விஷால் இப்படி ஆகிவிட்டார் என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X