சரக்கு ஓவராகியிருக்குமோ?.. லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலி கான் என்ட்ரி.. அந்தணன் போட்ட போடு!

சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் வலைப்பேச்சு அந்தணன் லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சியையும் வச்சு செய்ய தயார் ஆகி விட்டார் என்றே தெரிகிறது.

Valaipechu Anthanan trolls Mansoor Ali Khan who enters Leo Success Meet

மன்சூர் அலி கான் ஒரு மார்க்கமாக லியோ வெற்றி விழா அரங்கத்திற்குள் நுழைந்த நிலையில், அந்தணன் போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

சரக்கு படத்தில் நடித்து வரும் மன்சூர் அலி கான் ஃபுல் சரக்கு போட்டுக் கொண்டு லியோ வெற்றி விழாவுக்கு வந்து விட்டாரா என்கிற தொனியில் அந்தணன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.

Valaipechu Anthanan trolls Mansoor Ali Khan who enters Leo Success Meet

லியோவுக்கு எதிராக: லியோவில் உள்ள பாசிட்டிவ்களை டோட்டலாக ஒதுக்கி விட்டு அதில் உள்ள சிறு குறைகள் முதல் பெரிய குறைகள் வரை பூதக்கண்ணாடி போட்டு தொடர்ந்து பேசியும் விமர்சித்தும் பலர் கல்லா கட்டி வருவதாக விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, செய்யாறு பாலு, ப்ளூ சட்டை மாறன், மீசை ராஜேந்திரன், மனோபாலா விஜயபாலன், ரமேஷ் பாலா என ஒரு பெருங்கூட்டமே லியோவுக்கு எதிராகவும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு எதிராக செயல்பட்டு வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

வசூல் மூலம் பதிலடி: லியோ படம் படுதோல்வி என தொடர்ந்து இவர்கள் நெகட்டிவிட்டியை கிளப்பி வந்தாலும், இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது லியோ திரைப்படம். ஜெயிலர் படத்தை அடுத்து அதிக வசூல் ஈட்டி லியோ முந்தியுள்ள நிலையில், தரமான பதிலை வசூல் மூலம் விஜய் ஹேட்டர்களுக்கு கொடுத்துள்ளார்.

Valaipechu Anthanan trolls Mansoor Ali Khan who enters Leo Success Meet

அந்தணன் கலாய்: மன்சூர் அலி கான் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக நேரு ஸ்டேடியத்திற்கு சாமி வந்தது போல ஆடிக் கொண்டு உள்ளே என்ட்ரி கொடுக்க ரசிகர்கள் கத்தி ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த வீடியோவை பார்த்த அந்தணன் "சரக்கு ஓவராகியிருக்குமோ?" என ட்வீட் போட்டு தற்போது விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X