Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படம் எப்படி இருக்கு? பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்!
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இப்படம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.
கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தான் இந்த அமரன்.

சிவகார்த்திகேயனின் அமரன்: இப்படம் குறித்து பல விஷயத்தை வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார். அதில், மற்ற படத்தைப் போல இல்லாமல் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவிடம் பெரிய அளவில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த படத்திற்கு தான் அமெரிக்காவில் ப்ரோமோஷன் நடக்கிறது. பட ப்ரோமோஷன் சிங்கப்பூர், மலேஷியாவில் நடப்பதைத்தான் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் அமெரிக்காவிற்கு சென்று ப்ரோமோஷன் செய்ய இருக்கிறார். அதில் கமல்ஹாசனும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான பிளானை படக்குழு போட்டு வருகிறது.
அதிகரித்த பட்ஜெட்: அமரன் படத்திற்கு 120 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. படம் ஆரம்பிக்கும் போது சொன்ன பட்ஜெட்டைவிட கூடுதலாக செலவாகி உள்ளது. ஒரு கட்டத்தில் இதுகுறித்தும் தயாரிப்பு நிறுவனம் பேசி அவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்ன என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும்.
படத்தின் கிளிம்ஸ் வீடியோ: இந்த படத்தில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு அண்மையில் வெளியிட்டது அதை மக்கள் கொண்டாடினார்கள். அதே மனநிலையில் படம் பார்க்க வருபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். ஆனால், அமரன் படம் வழக்கமான சிவகார்த்திகேயன் படமாக இருக்காது. முழுக்க ஒரு சீரியசான சிவகார்த்திகேயனைத்தான் இந்த படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால், படத்தில் காதல் காட்சிகள் இருக்கும் அதற்கு உண்டான ரொமான்ஸ் இருக்கும்.
சொதப்பிய முருகதாஸ்: அமரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் ஒரு ரக்கடான ரோலில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முருகதாஸ், சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லும் போதே, எந்த படத்திலும் இல்லாத ஒரு புது சிவகார்த்திகேயனாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். தற்போது முருகதாஸ் பாலிவுட்டில் ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இருபது நாளில் வந்துவிட்டு இந்த படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவர், அந்த இந்தி படம் முடியாததால், அங்கே இருக்கிறார். இதுதான் இந்த படத்தின் தாமதத்திற்கு காரணம், முருகதாஸ் வந்ததும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











