சீனு ராமசாமி இவ்ளோ மோசமானவரா?.. அந்த நடிகைக்கு அப்படியொரு டார்ச்சர் கொடுத்தாரா?.. பிஸ்மி பகீர்!
சென்னை: மன்சூர் அலி கான் மற்றும் நடிகை த்ரிஷா இடையே எழுந்துள்ள பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சினிமாவில் பல நடிகர்களும் இயக்குநர்களும் நடிகைகளை மோசமாகத்தான் பார்க்கின்றனர் என்றும் நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டே விலகி ஓடவும் அவர்கள் தான் காரணம் என்றும் பிஸ்மி பகீரை கிளப்பி உள்ளார்.
கூடல் நகர் படத்தை இயக்கி 2007ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. விஜய்சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி அவர் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

விஜய்சேதுபதியின் ஃபேவரைட் இயக்குநர்: அந்த படம் கொடுத்த அங்கீகாரம் தான் விஜய்சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. இடம் பொருள் ஏவல் எனும் படத்தில் அடுத்து நடித்தார் விஜய்சேதுபதி. அந்த படம் மட்டும் இன்னமும் வெளியாகவே இல்லை. அதன் பிறகு சீனு ராமசாமி - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவான தர்மதுரை படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சமீபத்தில் மீண்டும் இவர்கள் இணைந்து உருவான மாமனிதன் படமும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது.
சீனு ராமசாமி சில்மிஷம்?: வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமான மனிஷா யாதவ், ஆதலால் காதல் செய்வோம், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இடம் பொருள் ஏவல் படத்திலும் மனிஷா யாதவ் நடித்தார் என்றும் அவருக்கு சீனு ராமசாமி கொடுத்த டார்ச்சர் காரணமாகத்தான் அவர் சினிமாவை விட்டே சில காலம் ஒதுங்கி விட்டார் என்றும் அந்த படம் தாமதமாக காரணமே அதுதான் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பிஸ்மி பகீரை கிளப்பி உள்ளார்.
மனிஷா யாதவுக்கு நேர்ந்த சோகம்: இளம் சிறுமியாக சினிமாவில் அறிமுகமான மனிஷா யாதவ் முதல் படத்திலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பள்ளி மாணவியாக நடித்த நிலையில், தொடர்ந்து அவருக்கு சினிமாவில் அதே போன்று மோசமான கதாபாத்திரங்களே குப்பை கதை படம் வரை கிடைத்து வந்த நிலையில், சினிமாவில் உள்ள பலரும் அவரை தவறாக அணுகினர் என்கிற குண்டையும் பிஸ்மி தூக்கிப் போட்டுள்ளார். மாமனிதன் படம் இயக்கிய சீனு ராமசாமி பற்றி மனிஷா யாதவ் அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக பிஸ்மி சொல்லியிருப்பது தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











