Santhanam: சந்தானம் ஒரு குப்பை.. வெச்சு செய்த பத்திரிக்கையாளர் பிஸ்மி!
சென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில், வடக்குபட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் டிரைலரில் பெரியாரின் பெயரை இழிவுப்படுத்தும் வகையில் வசனம் இடம் பெற்று இருந்ததால், சந்தானம் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இணையத்தில் நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.
டிக்கிலோனா படத் தொடர்ந்து கவுண்டமணியின் பிரபல காமெடியை நினைவுப்படுத்தும் விதமாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர். நகைச்சுவையும் மையமாக வைத்து உருவாகும் இப்படம் உருவாகி உள்ளது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்தில் பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் வசனம் இடம்பெற்றது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வலைப்பேச்சு பிஸ்மி: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சினிமா பல நேரங்களில் குப்பையைக் கூட கோபுரத்தில் ஏற்றுவிட்டுவிடும், அப்படி கோபுரத்தில் ஏற்றுவிடப்பட்ட ஒரு குப்பை தான் காமெடி நடிகர் சந்தானம். மக்கள் மத்தியில் பெயர் எடுத்த ஒரு நடிகரை குப்பை என்று சொல்லலாமா என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சந்தானம், பொங்கல் வாழ்த்து தெரிவித்துவிட்டு நான் அந்த ராமசாமி இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் அப்படி சொன்னது தந்தை பெரியாரைத்தான்.
டெலிட் செய்தார்: சந்தானத்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் சந்தானத்தை கடுமையாக வசைப்பாடத் தொடங்கிவிட்டார்கள். இந்த ட்வீட்டுக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்காத சந்தானம், அந்த பதிவினை டெலிட் செய்துவிட்டார். சந்தானம் நடித்து வரும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ப்ரோமோஷன் செய்த அவர், இந்த பதிவு மக்களை புண்படுத்திவிட்டது என்றால், அதற்கு வருத்தம் தெரிவிப்பது தான் அடிப்படையான பண்பு. ஆனால், எதிர்ப்புக்கு பயந்து அந்த பதிவை டெலிட் செய்த சந்தானம். இதுவரைக்கும் தனது செயலுக்கு வருத்தம் கேட்கவில்லை.

பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளார்:அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரிலும், தந்தை பெரியாரை மோசமாக விமர்சனம் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில், இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டுட் திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்க, அந்த ராமசாமி நான் இல்லை என்று பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த படத்தில் சந்தானம் பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளது தெரியவருகிறது.
நடிகர் என்பதை மறந்தார்: நடிகர் சந்தானம் திரைக்கு முன்னால் ஒரு காமெடி நடிகராக இருக்கலாம். ஆனால், திரைக்குபின்னால், சாதிய வன்மம் பிடித்த நபராக இருக்கிறார். இதற்கு உதாரணம் ஜெய்பீம் படம் வெளியான போது, வன்னியர்களை இழிப்படுத்துவது போல காட்சி இருக்கு என்று ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்ட போது, நான் ஒரு நடிகர் என்பதை மறந்து வன்னியராக கருத்து கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், இவர் ஜக்கி வாசுதேவின் சீடராக இருக்கிறார். இதை பல பேட்டியில் சொல்லிக் கொண்டு அவரின் தூதுவர் போல செயல்படுகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











