லியோ History of Violence காப்பியா? லோகேஷிற்கு அதற்குள் கற்பனை வறட்சியா.. விளாசிய பிஸ்மி!
சென்னை: லியோ History of Violence திரைப்படத்தின் காப்பிதான் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி பல கலவையான விமர்சனத்தை அள்ளி வருகிறது.

படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருகிறது.
வலைப்பேச்சு பிஸ்மி: அதிரடி ஆக்ஷன் திரைப்படமான லியோ திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் காப்பிதான் என்றும், அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள் லியோ படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
உறுதியான தகவல்: அதை உறுதிப்படுத்தும் வகையில் சினிமா மூத்த பத்திரிக்கையாளர் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் காட்சியை உங்கள் பார்வைக்கு என்று பகிர்ந்து இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளானதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பேசிய பிஸ்மி, லியோ படக்குழு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்திற்காக ரைட்ஸ் வாங்கவில்லை என்பது நூறு சதவீதம் உறுதியான தகவல்.
கற்பனை வறட்சியா: ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ஒரு காட்சி லியோ படத்தில் ஒரு தெறிப்பு மாதிரி வரும், இதனால், ரைட்ஸ் வாங்க தேவையில்லை என்று அவர் முடிவு செய்துவிட்டதால் லோகேஷ் ரைட்ஸ் வாங்கவில்லை. 20,30 படம் எடுத்த இயக்குநர் இதுபோன்று காப்பி அடித்தால் கூட பரவாயில்லை மன்னித்துவிடலாம். ஆனால், நாலாவது ஐந்தாவது படம் எடுக்கும் லோகேஷிற்கு கற்பனை வறட்சி ஏற்பட்டு, மற்றொரு படத்தை இன்ஸ்பிரேஷனாகி எடுக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.
ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்: கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தில், ஒரு நகரில் உணவு கடை வைத்து நடத்தி வரும் ஹீரோ தன் ஊருக்குள் வரும் திருடர்களை கொல்கிறான். இதனால் அவனை அந்த நகரத்தினர் கொண்டாடுகிறார்கள் அவன் செய்த கொலையால் கேங்ஸ்டர்கள் அவனைத் தேடி வருகின்றனர். இதனால் அவன் குடும்பத்தினரை பிரிகிறார். அதன் பின் அவன் வாழ்வில் என்ன நிகழப் போகிறது என்பதுதான் அந்த படத்தின் கதையாகும்.


Click it and Unblock the Notifications











